10 Feb 2017

மக்களின் உரிமைகளை உள்ளடக்கிய தீர்வினை அங்கிகரிக்காவிட்டால். அரசியல் அமைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் - கஜேந்திரகுமார்

SHARE
எங்களுடைய மக்களின் உரிமைகளை உள்ளடக்கிய தீர்வினை நீங்கள் அங்கிகரிக்காவிட்டால்.  எந்தவித அரசியல் அமைப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற செய்தியினை நாங்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இடைவிடாது 65 வருட காலங்களாக நாங்கள் கூறியுள்ளோம். என தமழ்த்தேசிய மக்கள்
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்குடா மைதானத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற எழுகதமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுடிதெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…

தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழை நடாத்துவது எந்தவித கட்சிக்கு எதிராகவோ அல்லது எந்வொரு தனிபருக்கோ ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நாங்கள் இந்தபேரiணியை முன்னெடு;க்கவி;ல்லை எமது தமிழ்மக்களை ஏமாற்றி பிழையான பாதையில் கொண்டுசெல்வதில் இருந்து எமது மக்களின் தீர்மானத்திற்கு அமைய அவர்களின் அவர்களை சுயமாக இயங்க செய்வதற்காகவே இதனை நாங்கள் நடாத்துகின்றோம். தமிழ் மக்கள் தீர்வு விடயத்தில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளனர்.

எமது மக்களின் உரிமைகளை பெறுவதாக இருந்தால் தேசிய அங்கிகாரத்துடன் நாங்கள் பொருளாதாரம்,சமூகம்,சமய ரீதியில் சிங்களமாக்களுக்கு சமமான தீர்வினை தரவேண்டும். எங்களுடைய மக்களின் உரிமைகளை உள்ளடக்கிய தீர்வினை நீங்கள் அங்கிகரிக்காவிட்டால்.  ஏந்தவித அரசியல் அமைப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற செய்தியினை நாங்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இடைவிடாது 65 வருட காலங்களாக நாங்கள் கூறியுள்ளோம்.

தற்போது அமைகக்ப்பட்டு வரும் அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் தீர்மானத்து அமைவாகவே அமைக்கப்பட்டு வருவதாக சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது. அணமையில் நடாத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் இச்செய்தியானது 64 நாடுகளுக்கு கூறப்பட்டு வருகின்றது. ஒற்றை ஆட்சியினால்தான் நாங்கள் அழித்துகொண்டு வருகின்றோம். எமது மக்களினால் தொடர்ச்சியாக 65 வருகாலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை புறந்தளள்p அதனை மீறி எமது பெயரை பயன்படுத்தி சில விடயங்களை ஜ.நா சபையிலே நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்ககை எடுக்கப்படுகின்றது. இது அரசியல் மோசடியாகும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கான பொறுப்புக் கூறல் என்பது தற்போது தேவையில்லை என எம்மவர்களினால் உலகநாடுகளுக்கு எடுத்துரைகக்பபடுவதுடன்   இத் தீர்மானத்தினை இரண்டுவருடம் ஒத்திவைக்குமாறும் கூறியுள்ளனர். இவ்வாறான செயற்படுகளுக்கு மத்தியில் எமது மகக்ளின் ஒற்றமையின் பலத்தினை உலகறிய செய்யவேண்டும் என்பதறை;காவே இது நடைபெறுகின்றது எழுக தமிழ் இடம் பெறுவதால் எவரும் எவருக்கும் வாக்கு கேட்பதில்லை வாக்களிப்பதுமில்லை இது தேர்தல் களம் அல்ல அதனை நீங்கள் சரியான கோணத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும். எமக்கு மென்வலு ஒரு போதும் தீர்வைத்தராது இது எமக்கு தேவையில்லை மாறாக மக்கள் வலுவே எமக்குதேவை இதுவெ தீர்pவினை பெற்றுதரும் என்பதனை மக்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியானது நேற்று கல்லடி மணிக் கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி நவற்குடா விவேகானத்தா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்தை;து கோசம் எழுப்பியவாறு ஊர்வலத்தில் இடுபட்டனர் இதனை படத்தில் காணலாம் இதில் கரலந்து கொண்ட அரசியல் தலைவர்களையும் படத்தில் காணலாம். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: