மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் சிறுவன் ஒருவன் தாறுமாறாகத் தாக்கப்பட்டதில் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
(வயது 08) எனும் மூன்றாம் ஆண்டில் கற்கும் இந்தச் சிறுவன் புதன்கிழமை (01.02.2017) குறித்த பாடசாலையில் வைத்து அங்கு கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளாக முறையிடப்பட்டுள்ளது.
சிறுவனின் உடலெங்கும் சுமார் 25 இற்கு மேற்பட்ட அடிகாயத் தழும்புகள் உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
தான் சிறுநீர் கழிப்பதற்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்து மீண்டும் வகுப்புக்குச் சென்றபோதே தன்மீது ஆசிரியர் கடுமையாகத் தாக்கியதாக சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.
இச்சம்பவம்பற்றி பெற்றோர் சிறுவர் நன்னடத்தைப் பிரிவுக்கு முறையிட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment