களுவாஞ்சிகுடிபிரதேச செயலகத்தின் 69 ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்று(4.2.2017) காலை 9.00மணியளவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம் அகவணக்கம் செலுத்தி தேசியைக்கொடியை ஏற்றிவைத்தார்.அபிமானமிக்க சுதந்திரதினத்தின் சிறப்புக்கள்,நன்மைகள், பற்றி பிரதேச செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. இதன் பின்னர் பிரதேச செயலக வளாகம் சிரமதானமூலம் துப்பரவு செய்யப்பட்டது.
உதவிப் பிரதேசெயலாளர் திருமதி சத்தியகௌரி தரணீதரன்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர், ,பொலிசார், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வே.வரதராஜன், நிருவாக உத்தியோகஸ்தர் கே.தவேந்திரன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் , மற்றும்,கிராம உத்தியோகஸ்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment