25 Feb 2017

கல்வித் துறையின் முன்னேற்றத்துக்குமுகாமைத்துவம் அவசியமானது பட்டிருப்பு கல்வி வலயப் பணிப்பாளர் புள்ளநாயகம்.

SHARE
 (இ.சுதா) 

கல்வித் துறைசார் நிருவாகக் கட்டமைப்பு முகாமைத்துவச் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றபோது அந்நிறுவனத்தின் வெளியீடுகள் சிறப்பானதாக அமையும். பாடசாலைகளில் பரிசளிப்புவிழா நடாத்துவதன் மூலமாக மாணவர்களிடையே போட்டிமனப்பாங்கினை வளர்த்துக் கொள்வது மாத்திரமல்லாது
மாணவரிடையேமறைந்து இருக்கும் திறன்களையும் கல்விச் சமூகத்தினால் மதிப்பீடுசெய்யமுடியும்.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரிபுள்ளநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்….

இன்று இப்பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்புவிழா நிகழ்வின் நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பினை நோக்குகின்றபோது முகாமைத்துவத்தின் உயர்ந்த நியதியினைஅறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
உதயபுரம் தமிழ் வித்தியாலயம் மிக அண்மைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இப் பாடசாலையின் துரிதமான வளர்ச்சியானது பாராட்டத்தக்கது. 

புலமைப் பரிசில் பரீட்சையில் மாத்திரமல்லாது க.பொ.தசாதாரணதரப் பரீட்சையிலும் இப்பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் பெறுபேறுகள் ஏனைய பாடசாலைகளுடன் போட்டிபோடக் கூடியளவு உயர் நிலையில் உள்ளமை வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் எனக்குமாத்திமல்லாது இக்கிராமத்திற்கும் மெருமைதரக் கூடியவிடயமாகும்.

சமூகம் பாடசாலையிலிருந்து எதிர் பார்க்கும் வெளியீடு சிறப்பானதாக அமையுமாயின் அப் பாடசாலையின் முகாமைத்துவம் தங்குதடையின்றி முறையானநடைபெறுகின்றது என்பதனை உறுதிசெய்துகொள்ளமுடியும். கல்வி கலைத்திட்டத்தினைப் பொறுத்தமட்டில் இணைப் பாடவிதானச் செயற்பாடுகள் மிகஅவசியமானது. அந்தவகையில் இப் பாடசாலைசமூகத்தினால் முன்னெடுக்கப் படுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் பாராட்டத்தக்கது. எனக் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: