மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் மைலம்பாவெளியில் மோட்டார் சைக்கிளைத் திருடி மறைத்து வைத்திருந்த நபரையும் சந்தேக நபர் வசம் இருந்த திருடப்பட்ட மோட்டார்
சைக்கிளையும் தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு முன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாசிலாமணி சிவராமன் என்பவரின் மோட்டார் சைக்கிளை குறித்த நபர் வீட்டு மதிலால் ஏறிப் பாய்ந்து வளவுக்குள் நுழைந்து திருடிச் சென்று மைலம்பாவெளியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்துள்ளார்.
இது விடயமாக தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தாம் விரைந்து செயற்பட்டு ஒரு சில மணிநேரத்தில் மோட்டார் சைக்கிளையும் திருட்டு சந்தேக நபரையும் கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபரான ஏறாவூர் 5ஆம் குறிச்சியைச் சேர்ந்த மைக்கல் றொஷான் (வயது 23) ஏற்கெனவேயும் மோட்டார் சைக்கிள் திருட்டு உட்பட பல திருட்டு சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முகம் கொடுத்து வருபவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி எறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment