26 Feb 2017

முன்னாள் போராளிக்கும் மேலும் மூவருக்கும் மட்டக்களப்பில் விளக்கமறியல்

SHARE
கடந்த 21ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடியில் வைத்து ரி56 ரக துப்பாக்கியொன்றுடன், கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவர் உட்பட அவரது தகவலின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
மேலும் மூவருக்கும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 6ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவிடப்பட்டது.

மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு ஊறணி பிரதேசத்தில்  வைத்து கடந்த 21.02.2017 அன்று இரவு 9.00 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்த பேருந்தை நிறுத்தி சோதனை நடாத்தியபோது துப்பாக்கியுடன் இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் ரி. 56 ரக துப்பாக்கியும் 46 ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இருவர் எனவும் அவர்கள் முல்லைத்தீவு தேவிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: