உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சினால் செயற்படுத்தப்படும் திறன் விருத்தி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சக மொழித் தேர்ச்சி வகுப்புக்களில் பங்குபற்றியோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் கலாசார மத்திய
நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 28.02.2017 இடம்பெற்றது.
இதில் சக மொழிகளான சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழித் தேர்ச்சி வகுப்புக்களில் பங்குபற்றிய 135 பயிலுநர்களுக்கும் மற்றும் நாடகமும் அரங்கியலும் பாடபோதனையில் பங்குபற்றிய 26 பேருக்கும் இந்நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.எம். மஹ்பூழ் தெரிவித்தார்.
இந்த மொழித் தேர்ச்சி வகுப்புக்களில் அரசாங்க அலுவலகங்களில் கடமை புரிவோரும் பாடசாலை படிப்பை முடித்துக் கொண்டோரும் மற்றும் உயர் கல்வியைத் தொடர்வோரும் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment