26 Jan 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்களின் நீர் மட்டம் உயர்வு.

SHARE
அதிக மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பெரும்போக வேளாண்மைச் செய்கைகளிலும், மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளிலும் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட விவிசாயிகள் மழை பெய்யும் காலத்திலும் போதியளவு மழை கிடைக்காததினால் செய்கை பண்ணப்பட்டிருந்த
பெரும்பாலான பயிரினங்கள் வெய்யிலில், கருகிவிட்ட இந்நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகின்றது.

அந்த வகையில் மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தில் நீரின்றி வற்றிக் காணப்பட்ட சிறிய மற்றும் பெறிய குளங்கள் யாவும் நிரம்பி வழிவதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெல்லாவெளிக்குளம், பேரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக்குளம், பழுகாமம் குளம், உள்ள்ளிட்ட சிறிய குளங்கள் மழை நீரில் நிலம்பி வழிகின்றன. 

இந்நிலையில் நவகிரிக் குளத்தின் நீர் மட்டம் 23 அடி 2 இஞ்சி ஆகவும் தும்பங்கேணிக் குளத்தின் நீர் மட்டம் 11 அடி 5 இஞ்சி ஆகவும் உயர்ந்துள்ளதாக இக்குளங்களுக்குப் பொறுப்பாக பொறியியலாளர் எஸ்.மயூரன் தெரவித்தார். 

இதேவேளை உறுகாமம் குளத்தில் 24 அடியும், வாகனேரிக்குளத்தில 18 அடி 11 இஞ்சியும், வடமுனைக் குளத்தில் 8 அடி 4 இஞ்சியும், கித்துள்வெவக் குளத்தில் 6 அடி நீரும் உயர்ந்துள்ளதோடு,  வெலிக்காக்கண்டிக் குளத்தில் 15 அடி 9 இஞ்சி நீர் உள்ளதோடு இக்குளத்தில் 4 இஞ்சி அளவு மேலதிக நீர் வெளியேறுகின்றது, உறுகாமம் குளத்தில் 16 அடி 9 இஞ்சி நீர் உள்ளதோடு இக்குளத்தில் 1 அடி மேலதிக நீர் வெளியேறுகின்ற இந்நிலையில் 7 அடி உயரத்தில் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன, கட்டுமுறிவுக் குளத்தில் 12 அடி 7 இஞ்சி நீர் உள்ளதோடு ஒரு அடி மேலதிக நீர் வெளியேறுகின்றதாக, இக்குளங்களுக்குப் பெறுப்பான பொறியியலாளர் எஸ்.நிறோஜன் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன் கிழமை (25) காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் 91.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 81.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 94.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமத்தில் 96.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சையில் 73.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரியில் 145.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 101.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகரியில் 97.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகரை கட்டுமுறிவு பகுதியில் 130.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: