26 Jan 2017

வீதிகளை ஊடறுத்து மழை நீர் பாய்வதனால் போரதீவுப்பற்று பிரதேசத்தில் மூன்று வீதிகளில் போக்குவரத்துக்குத் தடை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக, மழை நீர் சில வீதிகளுக் குறுக்கீடு செய்து பாய்ந்து வருவதனால்
வீதிப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குபட்பட்ட 3 வீதிகளைக் குறுக்கீடு செய்து அதிக மழை நீர் பாய்வதனால் இவ்வீதிகளினுடனான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

வெல்லாவெளியிலிருந்து மண்டூருக்குச் செல்லும் பிராhன வீதியில் இரண்டு இடங்களில் மழை நீர் பாய்ந்து செல்வதனால் இவ்வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. 

அடுத்து வெல்லாவெளியிலிருந்து பாலையடிவட்டை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் நீர் திரம்பி வழிவதனால் இவ்வீதியுடனான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

இவ்விருவீதிகளில் அவசர அத்தியாவசிய போக்குவரத்துக்களுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்காக போரதீவுப்பற்று பிரதேச சபையின் ரெக்ரர் வாகனங்களை ஒழுங்கமைத்துக் கொடுத்துள்ளோம்.

இவற்றினைவிட காக்காச்சுவட்டையிலிருந்து ஆனைகட்டியவெளி நோக்கிச் செல்லும் பிரதான வீதியையும் ஊடறுத்து மழை நீர் பாய்வதனால் இதற்கு படகுச்சேவை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன் கிழமை (25)  மழை குறைந்துள்ள காரணத்தினால் இந்நிலைமை புதன்கிழமை (25) பிற்பகலுடன் சீரடையலாம்  என நம்புகின்றோம் என போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினத்திடம் புதன் கிழமை (25) தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: