மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் இலவசமாக சிங்கள ஆங்கில
மொழிக் கல்வி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைத்த(Batticaloa District Civil Citizen Council) லைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.
இன ஐக்கியத்திற்கும் அறிவாற்றல் விருத்திக்கும் மொழியறிவு முக்கியம் என்பதால் இந்த சக மொழி வகுப்புக்களை இலவசமாக நடாத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் இந்த இலவச சிங்கள மற்றும் ஆங்கில மொழி வகுப்புக்கள் ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் 4 மாத கால பயிற்சி நிறைவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆர்வமுள்ளோர் 0771307541 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment