20 Jan 2017

அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன்

SHARE
அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வியாழக்கிழமை பிற்பகல் (19.01.2017) நடைபெற்றது.

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழர் விழா ஊர்வலத்திலும் தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் கூறுகையில்@

மட்டக்களப்பில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் அவர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர் உரிமைக்காக தங்களது பங்களிப்புக்களைச் செய்திருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் விகிதாசரம் கணிசமாகக் குறைந்திருக்கின்றது.

அதற்குக் காரணம் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கிழக்கிலங்கையில் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளதும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதும் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை சீர் செவய்வதாக இருந்தால் தமிழ் மக்களிடையே ஒற்றுமை அவசியம். ஒற்றுமையே பெரும் பலம்.
கடந்த காலங்களில் நம்மிடையே ஒற்றுமை இல்லாததால் நாம் அடைந்த பாதிப்புக்கள் ஏராளம். அதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இவ்விதமான பொங்கல் விழாக்களினூடாக கலை கலாசார நிகழ்வுகளினூடாக நாம் ஒற்றுமையை வளர்க்கலாம்.

நாம் தற்போது ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்.
எங்கள் நாட்டினுடைய அரசியலில் கடந்த 70 வருடங்களாக பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

ஆயினும், இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான நியாயமான அரசில் தீர்வு அதனூடாக ஏற்படவில்லை.

ஆனால், தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” 

மட்டக்களப்ர் மாவட்டத்தில், தமிழ் மக்ககளாகிய நாங்கள், ஒற்றுமையாக வாழ வேண்டும், இந்த ஒற்றுமை ஒருபோதும்,  ஒற்றுமையே எமது பலம், ஒற்றுமை இல்லாமல் இருந்த காலத்தில் பல விதமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. சீர்குலைந்துபோகக் கூடாது, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் தொகை குறைவடைந்துள்ளது.

நிரந்தரமான நீதியான தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். எமது மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த தீர்வையும் நாம்பத் ஏற்கத் தயாராக இல்லை. என்றார்.

இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: