18 Jan 2017

நாட்டைப் பிரித்துக் கொண்டு தமிழர்கள் ஓடி விடுவார்கள் என்ற சந்தேகம் பெரும்பான்மைஇன மக்களுக்கு இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது அமைச்சர் துரை

SHARE
நாட்டைப் பிரித்துக் கொண்டு தமிழர்கள் ஓடி விடுவார்கள் என்ற சந்தேகம் பெரும்பான்மை இன மக்களுக்கு இன்னும், இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. இனிமேலும் அவர்கள் துட்டகைமுனுக்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்தவித கபடத்தனமும் இல்லாமல், இந்நாட்டின் இன சௌயன்யம் மேம்பட உழைப்போம் என எமது தலைவர் தெரிவித்திருக்கின்றார். இவ்வேளையில் எமது மொழியின் தனித்துவம், எமது இனத்தின் தனித்துவம் என்பவற்றைப் பாதுகாத்துக் கொண்டு மத்தியிலே கூட்டாட்சி,
மானிலத்திலே சுயாட்சி பெறுவதற்கு எந்த வித கபடத்தனமும் இல்லாமல் செயற்படுகின்றோம் என நாம் தெரிவித்திருக்கின்றோம்.

என கிழக்குமாகாண  விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மகாணசபையின் 5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்ட மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் காரியாலயம் பட்டிருப்பில் திங்கட் கிழமை (16) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தைத் திறந்து வைத்து கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

இந்த நாட்டிலே தமிழர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் மூன்று காரியங்கள் நிகழ வேண்டும். பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் எமது பிரச்சனையைத் தீர்ப்பதற்காக வேண்டி ஒன்றுபட வேண்டும், சர்வதேச ரீதியில் தமிழர்களின் பிரச்சனைகள் மேற்பார்வை செய்யக்கூடிய நிலமை வரவேண்டும், அடுத்து தமிழர்கள் அனைவரும் ஒன்றுமையுடன் திகழ வேண்டும். என எமது தலைவர் தந்த செல்வா தொடக்கம் பின்வந்த தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளார்கள். இவற்றுள் இரண்டு விடையங்கள் நிறைவேறியிருக்கின்றன. அடுத்தது தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்திலிருக்கின்றோம்.

இந்த நாட்டிலே ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் என்பது வெறுமனே மக்கள் வாக்குப்போட்டத்தினால் மாத்திரம் வந்தது என்று சொல்லிவிட முடியாது. மக்கள் வாக்களிப்பதற்கு உரிய சூழலை எமது தலைமைத்துவம் ஓசைப்படாமல் எவ்வாறு செயற்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்.

பண்டா செல்வா ஒப்பந்தத்தின் பின்னர் இந்த நாட்டு இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்தி இரத்தக்களரிக்குள் ஆளாகமாட்டார்கள் என தந்தை செல்வா அளப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் நிலமை அவ்வாறில்லாமல் அந்த ஒப்பந்தம் இழித்தெறியப்பட்டு, மாற்றமடைந்தன.  

புதிய அரசியலமைப்பு ஆக்கப்படுக் கொண்டிரு;ககின்ற இவ்வேளையிலும் பலர் அதனைத் தடுப்பதற்கு முனைகின்றனர். தேசிய கொள்கை வகுப்பு சட்டமூலத்தை எந்தவொரு மாகாணசபையும், ஏற்றுக் கொள்ளவில்லை,  அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குப் பகிர்தளிக்கப்பட வேண்டும், மாகாணசபைகளுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்படக்கூடாது என்று அனைத்து மாகாண சபைகளும் சொல்லியிருக்கின்றன என்றால் இந்த நாட்டுக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என்றுதான் அர்த்தம். ஒற்றையாட்சி என்பது பூதம் அல்ல. எனவே மாகாணசபைகள் இவ்வாறு தெரிவித்தும் மீண்டும் ஒற்றையாட்சிதான் வேண்டும் என உடும்பு பிடி பிடிக்கின்றார்கள் என்றால் ஏங்கேயோ பிழை இருக்கின்றது.

நாட்டைப் பிரித்துக் கொண்டு தமிழர்கள் ஓடி விடுவார்கள் என்ற சந்தேகம் பெரும்பான்மை இன மக்களுக்கு இன்னும், இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. இனிமேலும் அவர்கள் துட்டகைமுனுக்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்தவித கபடத்தனமும் இல்லாமல், இந்நாட்டின் இன சௌயன்யம் மேம்பட உழைப்போம் என எமது தலைவர் தெரிவித்திருக்கின்றார். இவ்வேளையில் எமது மொழியின் தனித்துவம், எமது இனத்தின் தனித்துவம் என்பவற்றைப் பாதுகாத்துக் கொண்டு மத்தியிலே கூட்டாட்சி, மானிலத்திலே சுயாட்சி பெறுவதற்கு எந்த வித கபடத்தனமும் இல்லாமல் செயற்படுகின்றோம் என நாம் தெரிவித்திருக்கின்றோம்.

இந்த நிலையில் எம்மத்தியில் இப்போதிருக்கின்ற தலைமைத்துவம் இன்னுமொரு தலைமைத்துவம் வேண்டும் என்று புறப்பட்டிருக்கின்றார்கள் எமது உடன்பிறப்புக்களும், வாஞ்சையுள்ள நண்பர்களும், எம்மீது விளையாட வேண்டாம் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை தந்திருக்கின்றார்கள். அந்த ஆணையை நாங்கள் சரிவரச் செய்வதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த முயற்சி சற்று எட்டிப்போகலம் வெறுமனே நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இவ்விடையத்தில் அரசியல் தலைவர்கள் அனைவரும் எமக்களித்த வாக்குறுதிகளுக்கும். சர்வதேச சமூகத்திற்கும், பதில் சொல்லியே ஆகவேண்டும். வேண்டும் என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: