18 Jan 2017

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா புதன் கிழமை (18) சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

SHARE
முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா  புதன் கிழமை (18) சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.  


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 லட்சம்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மீனவ ஒய்வு மண்டபத்தினை பிரதி அமைச்சர் திறந்து வைத்தார்


இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி, பட்டிபளை பிரதேச செயலக செயலாளர் திருமதி தினேஷ், உதவித் திட்டப்பணிப்பாளர் பிரபாகரன், முதலைக்குடா பாடசாலை அதிபர்  அகிலேஸ்வரன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், கண்ணன் முஸ்தபா கலீல் மற்றும் மீனவர்களும் கலந்து சிறப்பித்தனர்
SHARE

Author: verified_user

0 Comments: