நாட்டின் இதர பகுதிகளை விட வடக்கு கிழக்கிலே உள்ள காணிப்
பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவையாக உள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்கும் விஷேட இடம்பெயர் சேவை திங்களன்று (16.01.2017) ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இடம்பெயர் சேவையில் தொடர்ந்து உரையாற்றிய மாகாண விவசாய அமைச்சர்@
வடக்கு கிழக்கு மாகாணங்களிலே உள்ள காணிப் பிரச்சினைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ளதை விட ஏன் இவ்வளவு சிக்கலாவை என்பதை நாமெல்லோரும் வெளிப்படையாக அறிவோம்.
எனவே, இந்த சிக்கலான பிரச்சினைக்கு எவ்வாறு நியாயத்தைக் கண்டறியப் போகின்றோம் என்பது மிக முக்கியம்.
நான் இந்த இடத்தில் நியாயம் என்று எதைக் குறிப்பிடுகின்றேன் என்றால், சட்டம் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு தராது என்பது வெளிப்படையான விடயம்.
மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்கின்ற பலர் அந்த சட்டங்களிலே உள்ள துவாரங்களினூடாக உள்ளே நுழைந்து தாங்கள் சட்டப்படியானவர்கள் என்று நிரூபித்து விடுகின்றார்கள்.
இப்படிப்பட்ட சட்டத்தினால் நியாயம் வழங்கப்பட முடியாத விடயங்களுக்கு பிரித்தானிய சட்ட ஒழுங்கு முறைமையிலே ஒப்புரவு (நுஙரவைல) என்று ஒரு வழிமுறையைக் கையாளுகின்றார்கள்.
சட்டத்தினால் நியாயம் கிடைக்காத பிரச்சினைகளுக்கு ஒப்புரவு நீதி வழங்கும் வழிமுறையினூடாகத் தீர்வு காண்கின்றார்கள்.
எது நியாயம் என்று கண்டறிவதற்கு இரு பக்கங்களும் சரியாக விசாரணை செய்யப்பட வேண்டும்.
அந்த பாரபட்சமற்ற விசாரணையினூடாகவேதான் நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிலே மக்கள் எதிர்கொண்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கும் இந்த ஒப்புரவு தீர்வு முறை உதவும்.”என்றார்
0 Comments:
Post a Comment