கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி.எஸ்.எம்.ஹ_சைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்குமாகாண பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், விவசாமை அமைச்சின் செயலாளர் க.சிவநாதன், மண்முனை தென் எருவில் பற்று
பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை. உள்ளிட்ட விவசாய அமைப்புக்கள், கமநல அமைப்புக்ளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என கலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கு மகாணசபையின் 5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இக்காரியாலயம் கட்டப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும், மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் காரியாலயம் இன்மையினால் தனியார் இடங்களில் இருந்து பல இன்னல்களை எதிர் கொண்டு வந்த நிலையில் தற்போது கிழக்கு மாகாணசபையால் இக்காலியாலயம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment