மட்டக்களப்பு விவசாயிகள் வறட்சிக்குத் தாக்குப் பிடிக்கும் விவசாயத்திற்கு மாறவேண்டும் என மட்டக்களப்பு விவசாய
விரிவாக்கல் உதவிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் வவுணதீவு பிரதேச விவசாய அறுவடை விழா ஆயித்தியமலை கரவெட்டி அரசடிச்சேனை கிராமத்திலுள்ள விவசாயி எஸ். தங்கராசாவின் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (17.01.2017) நடைபெற்றது.
விவசாயப் போதனாசிரியர் கே. லிங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசயிகள் மற்றும் விவசாய அலுவலர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய பேரின்பராஜா மேலும் கூறியதாவது@
மண்ணின் வளம், காலநிலை, என்பவனற்றிற்கு ஏற்றாற்போல் பயிர்வகைகளை தெரிவு செய்து விவசாயம் செய்ய வேண்டும், அப்போதுதான் சிறந்த விளைச்சலைப் பெறமுடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வறட்சி நிலையை கருத்திற் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிர்களுக்குப் பாசனம் செய்ய வேண்டும்.
நிலவும் இத்தகைய கடுமையான வறட்சிக் காலநிலைக்கு மத்தியிலும் மிக சிறந்த முறையில் பயிர்ச் செய்கை மேற்கொண்டு சிறந்த விளைச்சல் அடையப்பெற்ற தோட்டத்தில் இவ் அறுவடை விழா நடைபெறுகிறது என்றார்.
இந்நகிழ்வில் சோளம், நிலக்கடலை, கௌபி, பயறு மற்றும் உழுந்து உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள் அறுவடை செய்யப்பட்டன.
பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், மட்டக்களப்பு விவசாய பாடவிதான அதிகாரிகளான எஸ். சித்திரவேல், என். கணேசமூர்த்தி மற்றும் விவசாய போதனாசிரியர்கள், பிரதேச விவசாயிகள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment