மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செலகமும் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு 1008 பானையில் பொங்கி
மழை வேண்டிய பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
புதன் கிழமை (18) வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து 108 பானையில் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது மழை வேண்டி மழைக் காவியமும் பாடப்பட்டது.
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சாம்பசிவம் ஐயர் தலைமையில் நiபூஜைகள் யாவும் இடம்பெற்றன. இதில் கலாசார உத்தியோகஸ்த்தர் ச.சோமசுந்தரம், மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பிரதேச பொதுமக்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மழை இன்றி, போரதீவுப்பற்று பிரதேசத்தில் செய்கை பண்ணப்படடுள்ள வேளாண்மை, மற்றும் மேட்டுநிலப் பயிர்களும் கருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment