18 Jan 2017

வரஇருக்கின்ற அரசியல் தீர்வை தமிழ் அரசியல்வாதிகள் குழப்புகின்றார்கள் - கணேசமூர்த்தி.

SHARE
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என சொல்கின்றார்கள். இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நடாத்துகின்ற இந்தஅரசாங்கத்தினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கும் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள், எனவே இச்சூழலில் ஒரு அரசியல் தீர்வு வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அதனைக் குழப்புகின்றார்கள். சுயநிர்ணயஉரிமை, சமஸ்ட்டிஅதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு, என தமிழ் அரசியல்வாதிகள் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்கள். அவ்வாறில்லாமல்
முஸ்லிம் மற்றும் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்து ஒரே கருத்துப்பட ஒரே குரலில் அரசியல் தீர்வைப் பெற வேண்டும்.

என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பும் தொகுதியின் அமைப்பாளரும், வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் சிரேஸ்ட்ட ஆலோசகரும், முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதான அபிவிருத்தி அமைச்சின் 11 லெட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் 29 சீவல் தொழிலாளர்களுக்கும், 13 தையல் தொழிலாளர்களுக்கும், துவிச்சக்கரவண்டி, தையல் இயந்திரம், உள்ளிட்ட வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை (17) களுதாவளை பொதுக்கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

ஒருசில அரசியல்வாதிகள் கொழும்பிலிருந்து கொண்டு வெளிநாட்டுப் பிரயாணங்களை மேற்கொண்டும், சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டும், அறிக்கைகளை விட்டுக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவை சிறந்த அரசியல் செயற்பாடு அல்ல. இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு சிறந்த அரசியல் தீர்வு வரவேண்டும். இந்நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வரும் பட்சத்தில் முஸ்லிம் மதக்களுக்கும் ஒரு அரசியல் தீர்வு வரவேண்டும் அப்போதுதான் வடக்கு கிழக்கில் ஒரு சுபீட்சமான அரசியல் சூழல் நிலவும்.

இந்தியாவில் முஸ்லிம் மதத்தவர்களும் தமிழர்கள் என்றுதான் சொல்வார்கள் ஆனால் நாம் இங்கு முஸ்லிம்கள் வேறு, தமிழர்கள் வேறு, என பிரிந்து செயற்படுகின்றோம். மதரீதியாகத்தான் நாங்கள் வேறுபட்டு நிற்கின்றோம் அனால் நாம் அனைவரும் தமிழர்கள்தான். எனவே தமிழ் பேசும் மக்கள் மிகவும் தெழிவுடன் புரிந்து செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்காக வேண்டி விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்பத்தில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம், சர்வதேசமும் உறுதியாக இருக்கின்றது. இலங்கையில் யுத்தக்குற்றம் நடைபெற்றது அதற்காக வேண்டி சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களினால் கொண்டு வந்தது அமெரிக்காதான். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தத்தினால் கொண்டுவரப்பட வில்லை.

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என சொல்கின்றார்கள். இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நடாத்துகின்ற இந்தஅரசாங்கத்தினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கும் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள், எனவே இச்சூழலில் ஒரு அரசியல் தீர்வு வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அதனைக் குழப்புகின்றார்கள். சுயநிர்ணயஉரிமை, சமஸ்ட்டிஅதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு, என தமிழ் அரசியல்வாதிகள் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்கள். அவ்வாறில்லாமல் முஸ்லிம் மற்றும் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்து ஒரே கருத்துப்பட ஒரே குரலில் அரசியல் தீர்வைப் பெற வேண்டும்.

இவற்றினைவிடுத்து வீதி அபிவிருத்திகளுக்காக ஒப்பந்தக்காரர்களிடம் கொமிசன் கேட்கின்றார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்கள் எவ்வாறு நினைத்தாலும் நான் ஒரு நேர்மையான அரசியல் வாதியாகத்தான் செயற்பட்டு வருகின்றேன். அந்த வகையில் பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு என்னால் இயன்ற அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். எனவே மக்கள் ஜதார்த்தத்தைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: