மாட்டுப் பொங்கல் தினத்தை தமிழர்களின் தைத்திருநாளாகக் கொண்டாடியிருக்கின்றார் இந்நாட்டின் பிரதமர். இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஏதே ஒருகாரணத்திற்காக வேண்டி தைப்பொங்கல் தின நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை, மாறாக பிரதமர் மாட்டுப் பொங்கல்
தினத்தை தைப்பொங்கல் தினமாகக் கொண்டாடியிருக்கின்றார்.
என கிழக்குமாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துதள்ளார்.
கிழக்கு மகாணசபையின் 5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்ட மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் காரியாலயம் பட்டிருப்பில் திங்கட் கிழமை (16) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி.எஸ்.எம்.ஹ_சைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
பூரணை விடுமுறை தினத்தில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சித்திரை வருடப்பிறப்பிறப்பை சிங்களவர்களும். தமிழர்களும் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வாக இருக்கின்ற காரணத்தினால்த்தான் அத்தினத்தில் மதுபான சாலைகள் மூடப்படுகின்றன. ஏனெனில் தமிழர்களின் பண்டிகைகள், விழாக்கள் நிறைந்த காலங்களில் மதுபான சாலைகள் திறப்பதற்கு அனுமதிகளிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள், இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும் தமிழர்களின் கலை கலாசாரங்களை அழிப்பதாகவே கருத வேண்டியுள்ளது. இச்சம்பவங்களை நாட்டில் நல்லட்சியை நடாத்திக்கொண்டிருக்கின்ற அரசாங்கம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு மேலாக மாறி, மாறி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக் சட்சியும், ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் தற்போது சிறுபான்மை மக்களி ஆதரவுடன் நல்லாட்சி என்ற அரசு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரசின் காலத்திலாவது சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தமிழ் மக்களுக்குக் பெற்றுக் கொடுக்காவிட்டால் இனிவரும் எந்த அரசாங்கத்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது. எனவே இந்நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன மற்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் இணைந்து இதய சுத்தியுடன் தமிழர்களின் பிரச்சனைககுத் மிகவிரைவில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கடந்த சுனாமித்தாக்கத்தினால் எமது விவசாயிகளின் வளங்கள் மாற்றமடைந்துள்ளன. அதுபோல் வெள்ளம், வரட்சி என மாற்றி மாறி வருவதனால் எமது விவசாயிகள் தொடர்ச்சியாக பெரும் நட்டத்தை எதிர் கொண்டு வருகின்றார்கள். இவற்றால் பொருளாதார தீரியில் பெரும் வீழ்ச்சியை மட்டக்களப்பு மாவட்டம் எதிர் கொண்டு வருகின்றது.
தற்போதைய காலகட்டத்தில் தொடர் வரட்சி நிலவி வருவலதனால் மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும், மீண்டும் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் வேதனையுடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment