31 Jan 2017

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை திறப்பு விழாவில் எந்த விதத்தில் ரவுப் ஹக்கிம் கலந்து கொள்கின்றார்? கேள்வி எழுப்புகின்றார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பானர் சாணக்கியன்

SHARE

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை திறப்பு விழாவில் எந்த விதத்தில் ரவுப் ஹக்கிம் கலந்து கொள்கின்றார்? இது முஸ்லிம் காங்கரஸ் மகாநாடா?  என்ற கேள்வி பலர் மத்தியில்
எழுந்துள்ளதாக  பட்டிருப்பு தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் தலைவரும்,நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவுப் ஹக்கிம் அவர்கள் எந்தவிதத்திலும் சம்மந்தப்படாத வகையில் இந் நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  
இது பட்டிருப்பு தொகுதியாகும், திறக்கப்படும் வைத்தியசாலை கிழக்கு மாகாணசபை சார்ந்த வைத்தியசாலை, இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் அதிதிகளை பாரத்தால் கிழக்கு மாகாண சபை சார்ந்த அரசியல்வாதிகளும் மட்டக்களப்பு, அம்பாரை, மாவட்டங்களைச் சார்ந்த அரசியல் பிரமுவர்களுமே  மற்றும் சுகாதார அமைச்சர்,தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொள்கின்றார் 

இதில் ஏன் அமைச்சர் சம்பந்தம் இல்லாமல்  கலந்து கொள்வதற்கான காரணம் யாது? இதனால் இது முஸ்லிம் காங்கரஸ் மகா நாடா என்ற கேள்வி எழுக்கின்றது. மறுவளம் பார்த்தால் கட்சிரீதியான அதிகாரத்தினை காட்டும் பலப்பரீட்சையாக இந்த நிகழ்வினை கொள்ளவேண்டியுள்ளது. 


இது தேவையற்ற தலையீடு ஒன்றென நான் கருதுகின்றேன். எமது மாவட்டத்தில் பல அமைச்சர்கள் இருக்கின்றபோதும் இவரை சீர்தூக்கி பார்ப்பதற்கான காரணம் என்ன? வைத்தியசாலைக்கு நிதி பெற்றுக் கொடுத்தவரா? அல்லது சுகாதார அமைச்சரா? ஒன்றிலும் சம்பந்தமில்லாமல் இந் நிகழ்வுக்கு வரவழைத்ததன் காரணம் என்ன? இது போன்ற சம்பங்கள் இனி இடம் பெறக்கூடாது என அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: