20 Jan 2017

எமக்குத் தீர்வு தாருங்கள் என மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரத்த குரலில் கேட்கும் நிகழ்வுதான் எழுக தமிழ் நிகழ்வாகும் - இணைத்தலைவர் வசந்தராஜா

SHARE
வடக்கு கிழக்கு இணைக்கப்படல் வேண்டும் காணி அபகரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசங்களில் புத்த பிரானுடைய சிலைகள் வைக்கப்படுகின்றன, கைது செய்யப்படவர்கள்
இதுவரையில் விடுவிக்கப்படவில்லை, காணாமல் போனோருக்கு இதுவரையில் தீர்வுகளில்லை, இவ்வாறான விடையங்களுக்கெல்லாம் எமக்குத் தீர்வு தாருங்கள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து உரத்த குரலில் கேட்கும் நிகழ்வுதான் எழுக தமிழ் நிகழ்வாகும்.

என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் மக்ளுக்கு தெழிவூட்டும் நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் புதன்கிழமை மாலை (18) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

கடந்த போராட்டத்தினால் சுமார் 99 ஆயிரம் விதவைகள் பொருளாதாரங்களைக் கட்டடியெழுப்ப முடியாத நிலையில் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள். புணர்வாழ்வழிக்கபட்பட நிலையில் போரில் ஈடுபட்ட சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டபவர்கள் தற்போது வரை மிகவும் கஸ்ட்டமான நிலையில் வசித்துக் கொண்டிருக்கின்றார்கள். பல இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பற்றிருக்கின்றார்கள். 

இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளது. ஆனால் இன்றுவரையில் அதற்குரிய விசாரணைகளும், தீர்வுகளும் நடைபெறவில்லை, சர்வதேச விசாரணையோ, உள்ளக விசாரணையே நடைபெறவில்லை, 60 வது வருடங்களுக்கு மேலாக எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் அவற்றுககுரிய தீர்வு என்ன, அத்தீர்வு எழுத்துருவாக்கப்பட வேண்டும் போன்ற நோக்கங்களுக்காகவே தமிழ் மக்கள் போரவை உருவாக்கப்பட்டது. தற்போது இப்பேரவை உப குழுக்களை உருவாக்கி இவற்றை தயரித்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் குழு தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரித்து அதன் பிரதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும், கொடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்வுத்திட்டத்திலுள்ள  விடையங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் இவற்றைக் கவனதில்லெடுக்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழ் மக்கள் பேரவை சில விடையங்களைத் திட்டமிட்டு செய்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் வடக்கிலும் கிழக்கிலும் எழுக தமிழ் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றது. அந்த வகையில் வடக்கில் சென்றவருடம் புராட்டாதி 24 ஆம் திகதி எழுக தமிழ் நடைபெற்றது. கிழக்கில் மட்டக்களப்பு நாவற்குடா மைதானத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி எழுக தமிழ் நிகழ்வொன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எமக்கு நாம் எல்லாம் எதிர்பார்க்கின்ற சமஸ்ட்டி ரீதியிலான தீர்வு ஒன்று வரவேண்டும் என மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரத்த குரலில் சொல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு இணைக்கப்படல் வேண்டும் காணி அபகரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசங்களில் புத்த பிரானுடைய சிலைகள் வைக்கப்படுகின்றன, கைது செய்யப்படவர்கள் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை, காணாமல் போனோருக்கு இதுவரையில் தீர்வுகளில்லை, இவ்வாறான விடையங்களுக்கெல்லாம் எமக்குத் தீர்வு தாருங்கள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து உரத்த குரலில் கேட்கும் நிகழ்வுதான் எழுக தமிழ் நிகழ்வாகும். என அவர்இதன்போது தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: