20 Jan 2017

சமஸ்ட்டி தீர்வு கிடைக்கப்போவதில்லை ஒற்றையாட்சிதான் வரப்போகின்றது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது - கஜேந்திரகுமார்

SHARE
சமஸ்ட்டி தீர்வு வேண்டும் என்றுதான் எமது மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தார்கள். ஆனால் நாம் எதிர் பார்க்கும் சமஸ்ட்டி தீர்வு கிடைக்கப் பேவதில்லை என ஒற்றையட்சிதான் கிடைக்கப் போகின்றது என்பதை அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலும் எமது விருப்பத்தோடும் ஒற்றையாட்சியை அமுல்ப்படுத்துவதற்கு இந்த அரசாதங்கம் வேலை செய்கின்றது. நோம் இப்போதிருந்தே அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. இதனையும் செய்யாவிட்டால் நாம் 65 வருடகாலமாக ஏமாற்றப்பட்டது போல் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படுவதோடு, தமிழ் மக்களின் சரித்திரத்தில் ஒற்றையாட்சிக்கு எமது ஆதரவை எடுத்துக் கொடுக்கும் நிலமைதான் ஏற்படும்.

எனதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்  எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் மக்ளுக்கு தெழிவூட்டும் நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் புதன்கிழமை மாலை (18) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

மகிந்த ராஜபக்ஸ இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த காரணத்தினால்தான் சீனாவுக்கு இலங்கையில் அதிகளவு வாய்;ப்புக் கிடைத்தது. இதனூடாக மகிந்த ராஜபக்க அவரது எதிர்கால வளர்சியை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட்டார். ஆனால் சீனா இலங்கையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோணத்தில்தான் இலங்கையில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அமெரிக்கா நோக்கியது. 

வடகிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வாக்கழித்திருக்கா விட்டால் இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்காது. வல்லரசுகளுக்கிடையில் நடைபெறுகின்ற அந்த போட்டியில் நாங்கள் பேரம்பேசி செயற்பட்டிருக்க வேண்டும். அது துரதிஸ்ட்டவசமாக நடைபெறவில்லை. இது எமது மக்கள் மீது பிளைஇல்லை.

ராஜபக்ஸ என்பவர் மிகவும் கொடூரமானவர், எம்மை அழித்தவர்  இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ராஜபக்ஸவை வீழ்த்த வேண்டும் என்ற சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டிருக்கும்வேளையில் தமிழ் மக்களின் வாக்குகளை உரிய முறையில் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தைக் கைவிட்டு விட்டோம். எம்மை வழிநடாத்த வேண்டியது எமது தலைவர்கள், ஆனால் துரதிஸ்ட்டவசமாக நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்திருந்தோம்.

இந்நிலையிலும் ஆட்சி மாற்றம் இடம்பெற்று  2 வருடங்கள் கழிந்த பின்னரும் அடிப்படையில் எதுவித மாற்றங்களும் இடம்பெறவில்லை, 2016 இற்குள் தமிழ் மக்கள் எதிர்ப்பார்ககும் அளவிற்கு ஒரு அரசியல் தீர்வு வரும் என எமது தலைவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் தான் ஆட்சியிலிருக்கும் வரைக்கும் தமிழ் மக்கள் விரும்பும் சமஸ்ட்டி தீர்வை வழங்கப் போவதில்லை, சர்வதேச விசாரணையை நான் அனுமதிக்கப் போவதில்லை, என கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எமது இருப்பு, காணி என்பன நாளாந்தம் பறிபோயக் கொண்டிரு;ககின்றன. அம்பாறையிலும், திருகோணமலையிலும் சிங்கள மக்கள் இருக்கின்றார்கள், ஆனால் சிங்கள மக்கள் இல்லாத மட்டக்களப்பில் திடீரென புத்த கோயில்கள் உருவாக்கும் நிலமைகூட மாறியிருக்கின்றது. இதுபோல் வடக்கிலும் நடைபெறுகின்றன இச்செயற்பாடுகள் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இல்லை.

சமஸ்ட்டி தீர்வு வேண்டும் என்றுதான் எமது மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தார்கள். ஆனால் நாம் எதிர் பார்க்கும் சமஸ்ட்டி தீர்வு கிடைக்கப் பேவதில்லை என ஒற்றையட்சிதான் கிடைக்கப் போகின்றது என்பதை அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலும் எமது விருப்பத்தோடும் ஒற்றையாட்சியை அமுல்ப்படுத்துவதற்கு இந்த அரசாதங்கம் வேலை செய்கின்றது. நோம் இப்போதிருந்தே அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. இதனையும் செய்யாவிட்டால் நாம் 65 வருடகாலமாக ஏமாற்றப்பட்டது போல் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படுவதோடு, தமிழ் மக்களின் சரித்திரத்தில் ஒற்றையாட்சிக்கு எமது ஆதரவை எடுத்துக் கொடுக்கும் நிலமைதான் ஏற்படும்.

30 வருட காலமாக போரால் பாதிக்கப்பட்ட எம்மினத்தின் பொருளாதாரங்கள் எமது கைகளை மீறிப்போகின்றன. இந்நிலையில் எமது மக்களின் நலன்களும் பாதுகாப்புடன் போணப்படுமாயின் இந்த அரசாங்கத்தையும் நாம் பாதுகாப்போம். எமது மக்களின் நலன்களைக் கைவிட்டு விட்டு அரசாங்கத்தின் நலன்களை மாத்திரம் வைத்திருப்பதுதான் நோக்கம் என்றால் நாம் ஒத்துழைக்கத் தயாரில்லை.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நகழ்ச்சிநிரலில் இலங்கை பத்திப்யப்பட்ட ஒன்றாகும். இலங்கையில் இன நல்லிணக்கம் நடைபெறுகின்றது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது, இராணுவம் வெளியேற்றப்பட்டு, அக்காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன, இராணுவம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கின்றது, இதற்கெல்லாம் தமிழ் மக்களின் முழு ஒத்துழைப்புக்கள் இருக்கின்றன. என கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம், 53 நாடுகளிடம் தெரிவித்திருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை அரசு காட்டிக்கொண்டு எதிர் வருகின்ற மார்ச் மாதம் ஜெனிவாவிலே இலங்கை தொடர்பாக எடுக்கப்படுகின்ற தீர்தமானத்தை இரண்டு , மூன்று வருடங்களுக்குப் பிற்போடுமாறு கேட்டுள்ளது. இதற்கு எமது அரசியல் தலைவர்களின் ஒத்துறைப்பைக் காட்டித்தான் இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது. என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: