டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாவட்குடாவைச் சேர்ந்த யுவதி 12.1.2017 அதிகாலை 3.00 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த பற்குணம்- சாமினி (23 வயது)எனும் பெண்ணே இன்று அதிகாலை 3.00 மணியளவில் மரணித்துள்ளார்.நேற்று
(11.1.2017)புதன்கிழமை காலை 9.00 மணியளவில் தனது தாயுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று காய்ச்சல் சம்பந்தமாக வைத்தியரிடம் தெரிவித்தார்கள்.சாமினியை பரிசோதித்த வைத்தியர் குழாம் வைத்தியசாலையில் உள்ள அவசர சிசிச்சைப்பிரிவில் அனுமதித்தார்கள்.அனுமதிக்கும் போது அதிகமான காய்ச்சல் காய்ந்தது.
இவரின் இரத்த மாதிரியை உடனடியாக பரிசோதனை செய்து பிரச்சனையை கண்டுபிடித்தார்கள்.கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிசிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் பின்பு மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு குறித்த யுவதி வருகை தந்தார்.கடுமையான காய்ச்சலை தாங்கிக் கொள்ளாமல் சிசிச்சை பெறுவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றார்கள். நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையிலே அதிகாலை பெண் உயிரிழந்துள்ளார்.
0 Comments:
Post a Comment