பொங்கல் மகிழ்ச்சியில் சக தோழிகளுடன் வெருகல் கல்லடிக்கரைக்கல் எனுமிடத்தில் கல்லின் மேல் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பல்கலைக் கழக மாணவி தவறி கடலில் விழுந்து பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
வெருகல் – வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த செல்வசிங்கம் பிரதீபா (வயது 20) என்ற பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவியே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது@ பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான தனது சக தோழிகளுடன் இந்த மாணவி பொங்கல் தினத்தன்று வெருகல் கல்லடி எனுமிடத்திற்குச் சென்று அங்குள்ள கல்லடிக்கரைக்கல் எனும் குன்றில் ஏறி நின்றவாறு ஷெல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அவ்வேளையில் எதிர்பாராத விதமாக சறுக்கி கீழே கடலில் விழுந்துள்ளார்.
அலைகளால் அள்ளுண்டு செல்லப்பட்ட அவரை அங்கிருந்த மீனவர்களும் கிராம மக்களுமாகச் சேர்ந்து தேடி சற்று நேரத்தில் மீட்டுள்ளனர். எனினும் உயிர் பிரிந்த நிலையில் சடலமாக அந்த யுவதி மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம், மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த யுவதியே வாழைத்தோட்டம் எனும் பின்தங்கிய அந்தக் கிராமத்திலிருந்து முதலாவதாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி அவர் பல்கலைக் கழகம் செல்லவேண்டி முதல் தினத்தில் அவரது சடலம் வீட்டுக்கு வந்து சேர்;ந்ததையிட்டு வாழைத்தோட்டக் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
சேருநுவர பொலிஸார் இச்சம்பவம் பற்றிய விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




0 Comments:
Post a Comment