10 Jan 2017

கல்லடி விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்திலிருந்து 31 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.

SHARE
(க.விஜி)

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட  கல்லடி  விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தில் அண்மையில் வெளியான  (2016 ) .பொ. (/) பரீட்சைபெறுபேறுகளின் மூலம்  31 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்  3 மாணவிகள் மருத்துவத்துறைக்கு  தெரிவுசெய்யப்பட்டு பாடசாலைக்கு புகழை ஈட்டித்தந்துள்ளார்கள். இது மெச்சத் தக்கவிடயமாகும். இக் கல்லூரியின்  106 வருடவரலாற்றில் இவ்வருடமே 03 மாணவர்கள் மருத்துவத் துறைக்குசெல்வது குறிப்பிடத்தக்கதாகும்சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்டநிலை 03), மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்டநிலை 09), இராஜபாரதி சஞ்சிதா (மாவட்டநிலை 28) இவற்றில்  சிவாஞ்சலி அதிவிசேடசிறப்பாகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.


இதனைவிட பௌதீகஉயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09மாணவிகளும் ,வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13 மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்லவுள்ளார்கள். இம் மாணவிகளையும், கற்பித்த ஆசிரியர்களையும், அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், பிரதி ஆசிரியர்களும்,பாடசாலைஅபிவிருத்திக் சங்கம் , ஆகியோர்கள் திங்கட்கிழமை (09)  பாராட்டி கௌரவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: