15 Aug 2015

தென்கொரியாவில் 6500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

SHARE

நாளை இடம்பெறவுள்ள தென்கொரியாவின்  70 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அந்நாட்டின் 6500 குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அந்த நாட்டு அதிபர் பார்க் கியூன் ஹை (Park Geun-Hye) விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தினையொட்டி நாடு முழுவதிலும் சிறையில் உள்ள 6527 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அதிபர் பார்க் கியூன் ஹை பிறப்பித்தார்.
தென்கொரியாவின் பிரபல தொழிலதிபர் சே டோ-வான் (Chey Tae-Won) நிதிமோசடி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவர் உட்பட 12 தொழிலதிபர்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட் டுள்ளது.


இது குறித்து நீதித்துறை அமைச்சர் கிம் ஹுவான் வாங் (Kim Hyun-Woong) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போது , தொழிலதிபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: