21 Jan 2017

2016 இல் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காகத் தென்றல் சஞ்சிகை வழங்கும் பரிசழிப்பு.

SHARE
2016 இல் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காகத் “தென்றல்” சஞ்சிகை  நடாத்தியமுன்னோடிப் போட்டிப்
பரீட்சைகளுக்கான பதக்கம் அணிவித்தலும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 44/1, பழைய கல்முனைவீதி, கல்லடி, மட்டக்களப்பில் அமைந்துள்ள தென்றல் சஞ்சிகையின் அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை (22) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

தென்றல்  சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். மேலும், ஹெட்வே பாடசாலையின் முகாமையாளர் ரி.ரஞ்சித் அன்ரனி, தொழிலதிபர் க.பாக்கியராசா, உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது அதிதிகளை வரவேற்றல், அகல் விளக்கேற்றல், அகவணக்கம், தென்றல் கீதம் இசைத்தல், வரவேற்பு நடனம், என்பன இடம்பெறவுள்தோடு, பரிசழிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: