மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய கே.சத்தியநாதன் ஓய்வு பெற்றச் சென்ற பின் நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிக்கு இலங்கை
கல்வி நிருவாக சேவையை சேர்ந்த கனகசூரியம் அகிலா என்பவர் பதில் கடமை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றுகிறார். நீண்ட காலமாக இப் பதவி வெற்றிடமாக இருப்பதையும் இதனால் கல்வி வலயம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு அறிவித்ததையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் உடனடியாக இந்த நியமனத்தைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்படி பதவிற்கான நேர்முகப்பரீட்சை விரைவில் இடம் பெறும் எனவும் இதன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment