மட்டக்களப்பு, ஏறாவூரிலிருந்து திங்கட்கிழமை (05.12.2016) மாலை“உம்ரா” எனும் இஸ்லாமிய மார்க்கக் சவூதி அரேபியா மக்கா நகருக்குப் பயணம் மேற்கொண்ட பக்கீர்த்தம்பி அலிமுஹம்மது (வயது 75) என்பவர் இலங்கை மாபோல பகுதியில் வைத்து மாயமாகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய முறைப்பாட்டை மாபோல பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதாக காணாமல் போனவரின் மகள் அலிமுஹம்மது நிஹாரா தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (06.12.2016) பிற்பகல் 2.00 மணிக்கு இவர் விமானப் பயணத்தை மேற்கொள்வதாக ஏற்பாடாகியிருந்தது என்றும் நிஹாரா தெரிவித்தார்.
இந்த வயோதிபர் காணாமல் போனது குறித்து மாபோல பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment