1 Dec 2016

வாகரையில் பசுமைக் கிராமங்களை உருவாக்கும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைப்பு

SHARE
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் பச்சை பசேலென்ற அழகிய கிராமங்களை அபிவிருத்தி
செய்தல் எனும் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித் திட்டம் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (29.11.2016) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பச்சைப் பசேலென்ற அழகிய கிராமங்களை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும்  நடைமுறைப்படுத்தப்படும் என பிரதேச செயலாளர் எஸ். ஆர் ராகுலநாயகி தெரிவித்தார்.

வட்டவான், மாங்கேணி தெற்கு, மதுரங்கேணிக்குளம், பனிச்சங்கேணி, ஊரியன்கட்டு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதேச செயலளார் எஸ்.ஆர். ராகுலநாயகி மற்றும் பிரதேச செயலக அலுவலர்களும் கிராம மக்களும் பங்கு பற்றினர்.




SHARE

Author: verified_user

0 Comments: