1 Dec 2016

பொலிஸ் காவலரண் மற்றும் காணொளிக் கமெரா என்பனவற்றை அகற்றக் கோரி கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் வியாழக்கிழமை நண்பகல் தெருவோரத்திற்கு வந்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்
கழகத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் சாவடி மற்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ள காணொளிக் கமெரா ஆகியவற்றை அகற்றுமாறு கோரியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மேலும் பரீட்சைப் பெறுபேறுகளை தாமதிக்காது வெளியிடுமாறும் மாணவர்கள் பல்கலைக்கழக நிருவாகத்தைக் கோரி நின்றனர்.

மாணவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகின்றார்கள் என்ற விடயம் ஏற்கெனவே வெளியாகியிருந்ததால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு பிரதான நெடுஞ்சாலைப் போக்குவரத்திற்கு எந்தவித இடைஞ்சலும் ஏற்படவில்லை எனப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகம் உள்ளது. 

அதேவேளை, இங்கு மாணவர்கள்,  கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் போன்றோரால் அவ்வப்போது கவன ஈர்ப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள், பகிடிவதைகள் என்பன நடத்தப்படுகின்றன.







SHARE

Author: verified_user

0 Comments: