காத்தான்குடி தளவைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வைத்திய உபகரணங்களின் தேவை போன்றவற்றை நிவர்த்தி செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களிடன் கோரிக்கை விடுத்ததன் காரணமாக நேற்று மாலை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் அனைவரையும் புதன்கிழமை (21) மாலை மாகாண சபைக்கு அழைத்து முதலமைச்சர் கலந்துரையாடினார்.
இதன்போது காத்தான்குடி வைத்தியசாலையின் குறைபாடுகளை அவசரமாக நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று பணித்ததுடன் ஏறாவூர் வைத்தியசாலையின் குறைகள் அங்குள்ள நிலமைகள் தொடர்பாகவும் முதலமைச்சர் சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment