செங்கலடி பதுளை வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்தினருகே 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதன்கிழமை மாலை (21.12.2016) இடம்பெற்ற இடம்பெற்ற இச்சம்பவத்தில் ரிப்பர் வாகனத்தை செலுத்திச் சென்ற அதன் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி அதன் சாரதியான புண்ணியமூர்த்தி பிரதீபாகரன் (வயது 28) கூறும்போது, பின்னால் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ்ஸ{க்காக இடம்விட்டு ஓரத்தில் ஒதுங்கித் தரித்து நின்ற போது தனது ரிப்பர் வாகனம் அருகிலிருந்த பள்ளத்தில் சரிந்து வீழ்;ந்ததாகத் தெரிவித்தார்.
எனினும் தான் தெய்வாதீனமாக எதுவித காயங்களுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் கூறினார். இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பள்ளத்தில் வீழ்ந்த ரிப்பர் வாகனம் சில மணிநேரங்களுக்குள்ளாக பத்திரமாக மீட்கப்பட்டது.
0 Comments:
Post a Comment