காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி-03 சென்றல் வீதி, மற்றும் நான்காம் குறுக்கு வீதிச் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான இச்சம்பவம் 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த எம். முஹம்மத் அதீக் (வயது 20) மற்றும் மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த எம். முஹம்மத் சஜீத் (வயது 29) ஆகியோரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment