11 Dec 2016

சமூக ஒற்றுமைக்கு உறுதிபூணுவோம்” மீலாத் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்

SHARE
ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்என நபியவர்கள் வலியுறுத்தி - போதித்த விடயம் காலத்தின் தேவைக் கருதி இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ இத்திருநாளில் உறுதிபூணவேண்டும் எனவும் அதற்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் தனது மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

அவர் விடுத்துள்ள மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ். அகிலத்திற்கு அருட்கொடையாக அவதரித்த அண்ணல் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவர்களின் வாழ்க்கை வழி முறைகளையும் போதனைகளையும் தம் வாழ்வில் பின்பற்றுவதற்கு இந்நாளில் உறுதிபூண வேண்டும்

அதற்கமைய, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் முஸ்லிம்கள் கட்சி, பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒன்றினைந்து செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது. இதனை ஒவ்வொரு முஸ்லிமும் உணரவேண்டும்

சமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, பரஸ்பரப் புரிந்துணர்வு, சகோதரத்துவம், நீதி மற்றும் நேர்மை என பல உயர் விழுமியங்களை நபி அவர்கள் போதித்துள்ளார்கள். இந்தப் போதனைகளுக்கேற்ப தமது வாழ்க்கையை மீளமைத்துக்கொள்வதற்கு மீலாதுன்நபி விழா முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும்.


நபியவர்களது போதனைகள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது சகல இனமக்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டுபவையாகும்.  –என்றார்
SHARE

Author: verified_user

0 Comments: