கடந்த 2004.12.26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 12 வது ஆண்டு ஞாபகார்த் நிகழ்வு நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறும்
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரவலாக நடைபெற்றன.
அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி ஞாபகார்த்த தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவுச் சுடர் ஏற்றி திங்கட் கிழமை (26) காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்றுபிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், மற்றும் அரச உத்தியோகஸ்த்தர்கள், உயிழிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் அமையப்பெற்றுள்ள சுனாமி ஞாபகார்த்த இடத்தில் மலரஞ்சலி செலுத்தி சுடர் ஏற்றி சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு அனுஸ்ட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment