10 Dec 2016

கிழக்குமாகாணத்தில் மாத்திரம் 1000 க்கும் மேற்பட்டவாய்ப்புற்றுநோயாளர்கள்சிகிச்சைபெற்றுவருகின்றனர் - விசேடபுற்றுநோய் வைத்தியநிபுணர் சாமாகுணதிலக்க

SHARE
(துறையூர் தாஸன்)

கல்முனைவடக்குஆதாரவைத்தியசாலையின் தரநிர்வாகப் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்டபுற்றுநோய் தொடர்பானவிழிப்புணர்வுக்
கருத்தரங்கு,2016.12.07 அன்றுமுற்பகல் 11.30 மணிக்குவைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில்,வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வுநிகழ்வில் மட்டக்களப்புபோதனாவைத்தியசாலையின் விசேடபுற்றுநோய் வைத்தியநிபுணர் டாக்டர் டீ.அய்சாமாகுணதிலக்கஅவர்கள்,விசேடஅதிதியாகவும் வளவளாளராகவும் கலந்துகொண்டார்.

விசேடபுற்றுநோய் வைத்தியநிபுணர் சாமாகுணதிலக்க,தனதுவிசாலமானஉரையில்கருவில் அமைந்துள்ளகுரோமோசோம்களின் மாறுதலானதுஅதன் சாதகமானவளர்ச்சியின் பெருக்கத்தில் மாறுதலைஏற்படுத்திபுற்றுநோய்க் கலங்களைதோற்றுவிப்பதுடன் அசாதாரணகட்டுப்பாடானகலங்களின் பெருக்கமும் வளர்ச்சியுமேபுற்றுநோய்க் கலங்களின் பிரதான இயல்பென்றும் இது உடலில் எப்பாகத்திலும் எவ் உறுப்பிலும் ஏற்படலாம் என்றும்,சமுதாயத்தில் வயதுமுதிர்ந்தமக்களும் அனேகமாகபெண்களுமேபுற்றுநோய்க்குஆளாகுவதுடன்,கடந்தகாலங்களில் மக்களின் வாழ்க்கைமுறையிலும் சுற்றாடலிலும் ஏற்பட்டமாற்றங்களுமேபுற்றுநோய் அதிகரிப்பதற்குமுதன்மையானகாரணம் எனவும் குறிப்பிட்டார்.

உதடு,வாய்,தொண்டைபுற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,வாதநாளிபுற்றுநோய்,குடல் மற்றும் குதப் புற்றுநோய்,நிணநீர்த் தொகுதிபுற்றுநோய்,இரத்தப் புற்றுநோய்,முன்நிற்கும் சுரப்பி(Pசுழுளுவுயுவுநு புடுயுNனு )புற்றுநோய்,மூளைப்புற்றுநோய் போன்றபுற்றுநோய்கள் ஆண்களைஅதிகமாகவும் மார்புபுற்றுநோய்,கர்ப்பபைபுற்றுநோய்,தைரொயிட் சுரப்பிபுற்றுநோய்,குடல் மற்றும் குதப் புற்றுநோய்,நிணநீர்த்தொகுதிபுற்றுநோய்,குருதிப்புற்றுநோய் போன்றபுற்றுநோய்கள் பெண்களைஅதிகமாகபாதிக்கின்றனஎன்றும்,பெண்களைத் தாக்கும் மிகப்பிரதானபுற்றுநோயாகமார்பகப்புற்றுநோய் பிரதான இடத்தைவகிக்கிறதெனவும் குறிப்பிட்டார். 

மார்புப் புற்றுநோயை சுய மார்புப் பரிசோதனையின் மூலம் மிகசுலபமாகஆரம்பத்திலேயேகண்டுபிடிக்கமுடியும் எனவும் சுய மார்புப் பரிசோதனையினைமாதத்திற்குஒருதடவைமாதவிடாய் சக்கரம் ஏற்பட்டு 10 நாட்களின் பின் செய்யவேண்டும் எனவும் சுய மார்புப் பரிசோதனையின் போது,மார்பில் குழி விழுதல்,தோடம்பழத்தோல் போல் மார்புத்தோல் மாற்றமடைதல்,மார்பில் ஏற்படும் ஆறாதகாயங்கள் அல்லதுவடுக்கள்,முலைக்காம்பில் ஏற்படும் மாறுதல்கள்,இரண்டுமார்பகங்களிலும் வேறுபாடு இருத்தல் மற்றும் மார்பில் கட்டிகள் இருத்தல்,தோல் மாற்றமடைந்துதடித்து இருத்தல்,இரு மார்பகமும் சமச்சீர் அற்று இருத்தல்,மார்பின் மூலைக்காம்பின் ஊடாகதிரவம் ஏதாவதுவடிதல் போன்றனமார்பகப் புற்றுநோய்க்குரியமுக்கியமானஅறிகுறிகள் எனவும் பரம்பரையில் மார்புப் புற்றுநோய் தோன்றியபெண்கள்,30 வயதுக்குமேற்பட்டபெண்கள்,சிறுவயதில்பூப்பெய்தியபெண்கள்,55 வயதிற்குமேலும் மாதவிடாய் வெளிப்படுகின்றபெண்கள்,பிள்ளைகள் அற்றபெண்கள்,30 வயதுக்குமேல் முதல் குழந்தைபெற்றபெண்கள் ,உடற்பருமன் கூடியபெண்கள்,அதிகளவுகொழுப்புப் பதார்த்தம் உண்ணும் பெண்கள் மற்றும் உடற்பயிற்சிகளைகடைப்பிடிக்காதபெண்கள் போன்றோருக்குமார்புப் புற்றுநோய் மற்றும் ஏனைய புற்றுநோய்களும் தோன்றக்கூடியசந்தர்ப்பங்கள் உள்ளனஎனவும்,உடலுறவின் போதோஅல்லதுஉடலுறவின் பின்னரோயோனிப் பகுதியின் ஊடாக இரத்தம் கசிதல்,இரு மாதவிடாய்களின் இடையில் அல்லதுமாதவிடாய் நின்றுவிட்டபின் இரத்தக் கசிவுஏற்படல் போன்றனகர்ப்பபைகழுத்துப் புற்றுநோய்க்குரியஅறிகுறிகளென்றும் மிகவும் இளவயதில் உடலுறவுகொள்ளும் பெண்கள்,அதிகளவுபிள்ளைகளைப் பெற்றதாய்மார்கள்,பாதுகாப்பற்றஉடலுறவுகொள்ளும் பெண்கள் போன்றோர் கர்ப்பபைகழுத்துப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கர்ப்பபைபுற்றுநோயைபெப்பரிசோதனையின்(PயுP ளுஆநுயுசு) மூலம் ஆரம்பத்திலேயே இனங்கண்டுகொள்ளலாம் எனவும் ஒவ்வொருசுகாதாரவைத்தியதிகாரிபணிமனையிலும், 35 வயதுக்குமேற்பட்டபெண்களுக்குஒவ்வொருமாதத்திலும் ஒருதடவைமாதர் நலகிளினிக்கில் (றுநுடுடு றுழுஆநுN ஊடுஐNஐஊ)இலவசமாகமார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பைபுற்றுநோய்க்கானபரிசோதனைகள் இடம்பெறுவதால்,ஒவ்வொரு 35 வயதுக்குமேற்பட்டபெண்களும் தவறாதுபரிசோதித்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

வாயில் ஏற்படும் வெள்ளைநிறபொட்டுக்கள்,வாய்க்குழியில் ஏற்படும் சிவப்புநிறபொட்டுக்கள்,நீண்டகாலகாயங்கள்,வாயைஅசைத்தல்,திறத்தல்,உணவுமெல்லுதல் கடினமாதல் என்பனவாய்ப்புற்றுநோய்க்குரியபிரதானஅறிகுறிகளென்றும் வெற்றிலை,சுண்ணாம்பு,பாக்குமெல்லுதல்,நீண்டகாலபற்சிதைவு,வாயினுள் ஏற்படும் காயங்கள்,புகைத்தல்,மது அருந்துதல் போன்றபழக்கங்களைஉடையவர்கள்வாய்ப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதுடன் புகைத்தல் ஆண்களுக்குமலட்டுத் தன்மையையும் பெண்களுக்குகருச்சிதைவையும் ஏற்படுத்துவதனால்,புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனையினைதவிர்ப்பதன் ஊடாகசுவாசப் புற்றுநோய்,குரல் வளைப் புற்றுநோய் போன்றபுற்றுநோய்களில் மட்டுமல்லாதுமேலும் பலநோய்களில் இருந்தும் பாதுகாப்புபெறலாம் என்றும் புகைத்தல்,மது அருந்துதல்,வெற்றிலைமெல்லுதல் போன்றதீயபழக்கங்களைதவிர்ப்பதுடன் இரு மாதத்திற்குஒருதடவையாவதுஉங்கள் வாயைசுயமாகபரிசோதித்து,அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால் மருத்துவரைஉடனடியாகநாடிஅதற்குரியசிகிச்சைகளைபெற்றால் வாய்ப்புற்றுநோயைஆரம்பத்திலேயேமுற்றாககுணப்படுத்தமுடியும் எனகுறிப்பிட்டார்.

தைரொயிட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபரம்பரையைச் சேர்ந்தவர்கள்,குடல்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் தைரொய்ட் புற்றுநோயின் பாதிப்புக்குஆளாகுவர் என்றும்,பெரும்பாலும் இது 30 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்குவரக்கூடியசாத்தியங்கள் உள்ளதெனவும் சூலகப் புற்றுநோய்க்குரியஅறிகுறிகள் உடனடியாகதெரியாமல் இருப்பதால் அதைகண்டுபிடிப்பதற்குகாலம் ஆவதால் மிகவும் பாரதூரமாக இருக்குமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் உணவுப் பழக்கவழக்கம்,அதிகளவுகொழுப்புஅடங்கியஉணவுவகை, இறைச்சிவகை,உடனடிஉணவுகள்,விலங்குப் புரதம்,பொதியிடப்பட்டஉணவுகளைஉண்ணுதல்,குறைந்தளவுமரக்கறிவகைகளைஉண்ணுதல்,மது மற்றும் சிகரெட் பழக்கவழக்கங்களுக்குஉட்பட்டவர்கள்,பரம்பரையில் மிகவும் நெருங்கியகுடும்பஉறுப்பினர்களுக்குபாதித்து இருத்தல் போன்றமேற்கூறியகாரணங்களால்அதிகளவு குடல் மற்றும் குதப் புற்றுநோய்ப் பாதிப்புக்குஆளாகக்கூடியவர்களென்றும் இவற்றைமுன்கூட்டியேகண்டுபிடித்தால் இலகுவாககுணப்படுத்தலாம் என்றும் சிறுநீர் செல்வதில் சிக்கல் உள்ளவர்கள்,தொடர்ந்துசிறுநீர் கழிக்கமுடியாமல் இருப்பவர்கள்,சிறுநீர் கழித்தபின்பும் சிறுநீர் இருப்பதுபோல் தோன்றுபவர்கள் போன்றஅறிகுறிகளுடன் வயதுமுதிர்ந்தஆண்களுக்குமாத்திரமேபுறஸ்டேட் சுரப்புபுற்றுநோய் ஏற்படுமெனவும் குறிப்பிட்டார். 

குருதிப்புற்றுநோய் சிறுவர்களையும் வயதுமுதிர்ந்தவர்களையும் பெருமளவாகபாதிப்பதுடன் இப்புற்றுநோய் தீவீரநிலையைஅடைந்தபின்னரே இதற்கானஅறிகுறிகள் தென்படுவதால்,சிகிச்சைபெறவேண்டியநிலைகாணப்படுகின்றதுஎனவும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக இருக்கும் இருமல்,குரலின் மாற்றம்,ஆறாதகாயங்கள்,கட்டி,உடம்பிலுள்ளமச்சங்கள் மற்றும் பாலுண்ணிகளில் திடீரெனஏற்படும் மாற்றங்கள்,அவைகள் பெரிதாகுதல்,மார்;பகங்களில் அல்லது ஏனைய இடங்களில் கட்டி,கல்லுமாதிரி இருக்கும் தசைகள்,யோனியில் இருந்துவித்தியாசமாகவெளியேறுகின்ற இரத்தம் மற்றும் நீர் வெளியேற்றம்,மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படுகின்றமாற்றங்கள் அல்லது இரத்தம் வெளியேறுதல்,தொடர்ச்சியாக இருக்கின்றமாதவிடாய் மற்றும் தொண்டையில் இறுக்கம்,எந்தஒருகாரணமும் இல்லாமல் உடம்புமெலிவடைதல் மற்றும் அருவருப்புத் தன்மைபோன்றனபுற்றுநோய்க்குரியபொதுவானஅறிகுறிகளெனவும் இவற்றில் ஏதேனும் தென்பட்டால் அருகிலுள்ளமருத்துவரைநாடுவதன் மூலம் புற்றுநோயைஆரம்பத்திலேயேகண்டறிந்துஅதற்குரியசிகிச்சைகளைபெறலாம் எனவும் கூறினார்.

உதடு,வாய்,தொண்டைபுற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,வாதநாளிபுற்றுநோய்,குடல் மற்றும் குதப் புற்றுநோய்,நிணநீர்த் தொகுதிபுற்றுநோய்,முன்நிற்கும் சுரப்பிபுற்றுநோய்,மூளைப்புற்றுநோய்,மார்புப்புற்றுநோய்,கர்ப்பபைபுற்றுநோய்,தைரொயிட் சுரப்பிபுற்றுநோய்,குருதிப்புற்றுநோய் போன்றபுற்றுநோய்களுடன் 200புற்றுநோய்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  

கிழக்குமாகாணத்தில் மாத்திரம் 1000 க்கும் மேற்பட்டவாய்ப்புற்றுநோயாளர்கள் தங்களின் நிலையினைஅறிந்துவெளியுலகுக்குவராமல் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
 என்றும் வலயக்கல்விஅலுவலர்கள்,பிதேசசெயலகஅலுவலர்கள்,பாடசாலைஅதிபர்கள்,சமூகநலன்விரும்பிகள்,சமூகஆர்வலர்கள்,சமூகத்;தில் வேலைசெய்பவர்கள்,போன்றோர் ஏதேனும் தன்னார்வநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின்ஊடாகநிதியுதவுபெற்றுபுற்றுநோய் சார்ந்தபடங்களைபொது இடங்களில்மற்றும் ஆரம்பபாடசாலைகளின் வெனர்களில் காட்சிப்படுத்திவிழிப்புணர்வைஏற்படுத்துவதன் மூலம் எமதுவருங்கால இளம் சந்ததியினரைபுற்றுநோயில் இருந்துமுறையாகபாதுகாத்துக்கொள்ளலாம் என கூறிதனதுபரந்தஉரையைநிறைவுசெய்தார்.

இக்கருத்தரங்குநிகழ்வில்பொதுமக்கள்,வைத்தியசாலைஅபிவிருத்திக்குழுதலைவர்,உறுப்பினர்கள்,சமூகஆர்வலர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.இக்கருத்தரங்கானதுமிகவும் போதியளவுவிளக்கத்துடனும் பயனுள்ளதாகவும் இருந்ததுஎனவும்,விசேடபுற்றுநோய் வைத்தியநிபுணர் டாக்டர் று.னு.ஐ.சாமாகுணதிலக்கஅவர்களுக்குகலந்துகொண்டவர்களின் சார்பில் மேன்மேலும் நன்றியைதெரிவித்துக் கொள்கின்றேன் என்று,வைத்தியசாலைஅபிவிருத்திக்குழுவின் உறுப்பினர் தனதுகருத்தினைமுன் வைத்திருந்தார்.

இக்கருத்தரங்கின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரைக்குமானஅதாவதுவிசேடபுற்றுநோய் வைத்தியநிபுணர் டாக்டர் று.னு.ஐ.சாமாகுணதிலக்கஅவர்களின்; ஆங்கிலஉரைகளைதரமுகாமைத்துவப் பிரிவின் பொறுப்புவைத்தியஅதிகாரிடாக்டர் N.ரமேஸ் அவர்கள்,சிறப்பாகதமிழ்மொழிபெயர்ப்புசெய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொற்றாஆட்கொல்லிநோயானபுற்றுநோய் 

தொடர்பானவிழிப்புணர்வை,வைத்தியசாலைஉத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் ஏற்படுத்தியமைக்காக,அவர் ஆற்றியபணியினைகௌரவித்து,விசேடபுற்றுநோய் வைத்தியநிபுணர் டாக்டர் று.னு.ஐ.சாமாகுணதிலக்கஅவர்களுக்கு,வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

தரநிர்வாகப் பிரிவுபொறுப்புதாதியஉத்தியோகத்தர் ச.ஸ்ரீகரன்அவர்களின் நன்றியுரைடன் அனைத்துநிகழ்வுகளும் நிறைவுபெற்றன.















SHARE

Author: verified_user

0 Comments: