18 Nov 2016

களுவாஞ்சிகுடி Max விளையாட்டுக்கழகத்தின் 8 வது வருட நிறைவினை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி

SHARE
களுவாஞ்சிகுடி Max விளையாட்டுக்கழகத்தின் 8 வது வருட நிறைவினை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியானது களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (16)  இடம்பெற்றது.
40 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய இவ் மென்பந்துக் கிறிக்கட் சுற்றுப் போபோட்டியின் இறுதிப் போட்டியில் ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகத்தினை எதிர்தாடிய தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தை     சுபீகரித்து      20000 ரூபாய் பணப் பரிசிலினையும், வெற்றி கேடயத்தையும் பெற்று கொண்டது.


இரண்டாம் கிண்ணத்தை ஆரயம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டதுடன் 10000 ரூபாய் பணப் பரிசிலினையும், வெற்றி கேடயத்தையும் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு உதயம் விளையாட்டு கழக வீரர் டினோசன் தொடர் ஆட்ட நாயகன்   விருதினை தட்டி சென்றதோடு ரூபா 5000       பரிசிலினையும் வெற்றி கேடயத்தையும் பெற்று கொண்டார். சிறந்த பந்து வீச்சாளராக மெக்ஸ் விளையாட்டு கழக வீரர் சம்பவான் தெரிவு செய்ய  பட்டதோடு ரூபா 2500 பண பரிசிலும் , வெற்றி கேடயத்தையும் பெற்று கொண்டார்.









SHARE

Author: verified_user

0 Comments: