18 Nov 2016

ஏறாவூர் வீதி விபத்தில் காயம்பட்டவர் சிகிச்சை பயனின்றி மரணம்

SHARE
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை அதிகாலை (நொவெம்பெர் 17, 2016) மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் ஏறாவூர் நகர சபைக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டபோது இந்த விபத்து சம்பவித்தது.

ஹோட்டல் உரிமையாளரான பாவா லேன், காத்தான்குடி 6 ஐச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆதம்லெப்பை முஹம்மது  ஷாஜஹான் (வயது 39) என்பரே மரணித்தவராகும்.

இவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகி;ச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

காத்தான்குடியிலிருந்து ஓட்டமாவடி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஏறாவூர் நகரில் பிரதான வீதிக்குக் குறுக்கே சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பலத்த அடிபட்டு வீதியில் விழுந்து காயம்பட்டிருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: