உணவே மனிதனை வாழ்விக்கவும் மரணிக்கவும் செய்கின்றது. நாங்கள் எமது உடலுக்குத் தேவையான உணவை உண்ண வேண்டும். அதை விடுத்து நாவுக்குத் தேவையான உணவை உண்பதன் மூலம் நாங்கள் நம்மையே நலிவடையச்
செய்து கொண்டிருக்கின்றோம். மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி அதிகமாகச் செய்ததெல்லாம் தன்னைத் தானே அழித்துக் கொண்டதுதான் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
உலக உணவு திகத்தினைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட விசேட நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போNது அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனிதர்கள் எல்லாம் கால்களில் நிற்கவில்லை வயிற்றில் தான் நிற்கின்றார்கள் என்று ஒரு அறிஞரின் கருத்து இருக்கின்றது. உணவு இல்லை என்றால் நாம் எழுந்து நிற்கவே முடியாது. எனவே தான் இந்த உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து உலக நாடுகளில் வழிநடத்தக் கூடிய விதத்தில் அதனுடைய நிகழ்காலத் தண்மையை சரியான முறையில் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக உணவு தினம் என்பதை நடைமுறைப்படுத்தி உலக நாடுகளிலும் உணவு தொடர்பான விழிப்புணர்வைச் செய்கின்றது.
மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி அதிகமாகச் செய்ததெல்லாம் தன்னைத் தானே அழித்துக் கொண்டதுதான். இவ்வாறான மிகவும் பூதாகாரமான அழிவு நிகழ்வுகள் உலக மகா யுத்தங்கள் என்று சொல்லப்படுகின்றது. இதனை விட உள்ளுர் யுத்தங்கள் அதிகம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
முதலாம் இரண்டாம் உலக யுத்தங்கள் முடிவடைந்த பின்னர் எஞ்சியிருக்கின்ற மக்களுக்கு உணவு வழங்குவது தொடர்பில் உலக நாடுகள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அதற்காக விஞ்ஞானிகள் முன்வந்தார்கள்.
விஞ்ஞானத்தினைப் பயன்படுத்தி மக்களுக்கு அதிகமாக உணவை வழங்கக் கூடிய பல்வேறு திட்டங்களைச் செய்தார்கள். அவர்களுக்கு முன்னே இருந்த சவால் அனைத்து மக்களுக்கும் மிக விரைவில் உணவு உற்பபத்தி செய்து வழங்க வேண்டும் என்பதாகும். அதற்காகத் தான் அவர்கள் உணவு உற்பத்தியில் இரசாயணத்தினைப் பாவித்தார்கள். இதற்குப் பசுமைப் புரட்சி என்றும் பெயர் வைத்தார்கள்.
இரசாயணப் பயன்பாட்டின் காரணமாக மிகப் பெரிய பசுமைப் புரட்சி ஏற்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட இரசாயணத்தினை மக்கள் சொல்லப்பட்ட விதத்தில் பாவிக்காததன் காரணமாகவும், மக்களுடைய வாழ்வில் வியாபாரம் புகுந்து விட்டதன் காரணமாகவும் அதிகமான இரசாயணங்களைப் பயன்படுத்தி உணவை விசமாக்கினர். எனவே இப்போது உலக நாடுகளில் உணவு தொடர்பாக ஏற்பட்டிருக்கின்ற சவால் விசமற்ற உணவு என்பதாகும்.
இது தொடர்பில் தான் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மூன்று ஆண்டு செயற்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்தக் கடமையைச் செய்கின்ற வகையில் எமது கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் அமைச்சும் விசமற்ற உணவினை மக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அந்தச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாகத்தான் ஆண்டு தோறும் விவசாயக் கண்ககாட்சியினைச் செய்து மக்களை அழைத்து விசமற்ற இயற்கைப் பசளை, இயற்கைக் கிருமிநாசினி, இயற்கைக் களைநாசினி என்பவற்றைப் பாவித்து விவசாயத்தினை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு தெளிவூட்டி வருகின்றோம்.
உணவே மனிதனை வாழ்விக்கவும் மரணிக்கவும் செய்கின்றது. உணவை மருந்தாக பயன்படுத்திட வேண்டும் என்றும் பலராலும் சொல்லப்பட்டிருக்கின்றது. எனவே நாங்கள் எமது உடலுக்குத் தேவையான உணவை உண்ண வேண்டும். அதை விடுத்து நாவுக்குத் தேவையான உணவை உண்பதன் மூலம் நாங்கள் நம்மையே நலிவடையச் செய்துகொண்டிருக்கின்றோம்.
இப்போது எமது பிரதேசத்தினைப் பொருத்த வரையில் மக்கள் விசமற்ற உணவை உண்ண வேண்டும் என்றும், விவசாயிகள் எல்லாம் விசம் கலவாத உணவை வழங்கிட வேண்டும் என்கின்ற ஆர்வமும் அதிகமாக இருக்கின்றது.
விவசாயிகளிடம் தான் எமது வாழ்கை தங்கியிருக்கின்றது. விவசாயிகள் விசமற்ற உணவைத் தருகின்ற போதுதான் நாங்கள் தேக ஆரோக்கியமுள்ளவர்களாக இங்கு வாழ முடியும். இவ்வாறான விடயங்கள் எமது அமைச்சின் மூலமாகவும் நிறுவனங்கள் மூலமாகவும் மக்களை வலுவாகச் சென்றடைந்திருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.
ஏர் வலிமை மூலம் தான் இந்த உலகை ஆழ முடியும். உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோன் என்கின்ற பழமொழி கூட உண்டு. உணவைக் கொடுத்து உயிர் கொடுக்கின்ற கைங்கரியத்தை விவசாயிகள் செய்கின்றார்கள்.
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அந்த அளவிற்கு விவசாயம் மேன்மையுள்ளதாக இருக்கின்றது.
உணவு என்பது அனைவருக்கும் சரியாகப் பகிர்ந்து கொண்டுக்கப்பட வேண்டும்.
இந்த உலகத்திலே அதிக வறுமை இருக்கின்றது. கோடான கோடி மக்கள் உணவிற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மறுபுறத்தில் இன்னும் சிலர் உணவைச் சமிபாடடையச் செய்வதற்காக வில்லைகளை உட்கொள்ளுகின்ற நிகழ்வும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் இருக்கக் கூடாது என்பதை எமது எல்லாத் தரப்புக்களும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் உணவு இருக்கக் கூடிய வகையிலே செயற்பட வேண்டியது எல்லோருடைய தர்மமுமாகும்.
தற்போது மருந்து இல்லாத உணவே இல்லையென்று ஆகிவிட்டது. இது வியாபாரிகள் தர்மம் அறியாது செய்வது. மனிதனுடைய வாழ்க்கை என்பது அறத்தைக் கடைப்பிடித்து அறத்தோடு பொருள் சேர்த்து அறவழியில் இன்பம் சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதைத்தான் எமது தமிழர் பண்பாடும் சொல்லுகின்றது. அறம் என்பது மனித வாழ்விலும் இருக்க வேண்டும், வியாபாரத்திலும் இருக்க வேண்டும். வியாபாரிகள் மக்களுக்கு கொடுக்கின்ற உணவின் மூலம் தான் நாங்கள் வாழ்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நஞ்சற்ற உணவினை மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
மிகப்பெரிய வியபாபார நிறுவனங்கள் எல்லாம் வியாபாரம் என்கின்ற அவாவின் காரணமாக மக்களுக்கு நஞ்சைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. நாம் அருந்தும் பாலில் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு தான் பால் இருக்கின்றது என்று எமது ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. இதுவெல்லாம் வியாபராம் உணவு முறையில் செய்கின்ற மிகப் பெரிய அநியாயம்.
எமது பிரதேசத்தில் எமது உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கிராமத்து மக்கள் மிகவும் பாக்கியசாலிகளாகவே இருக்கின்றார்கள் ஏனெனில் எமக்கு உணவு விடுதிகள் திறக்கப்படவில்லை என்றால் வீட்டில் பட்டினிதான். அடுப்பில்லாத வீடுகள் நகர்ப்பகுதிகளில் ஏராளம் இருக்கின்றன. இந்தத் துயரங்கள் எல்லாம் நீக்கப்பட வேண்டும். மக்களில் வாழ்வு விசமற்ற உணவின் மூலம் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment