யுத்தம் முடிவடைந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் மக்களின் அவலங்கள் மாறவில்லை. மக்களின் முகங்களில் எதையோ இழந்து விட்டு வாடிய முகங்களோடு இருப்பவர்கள் போல் தான் இன்றுவரை தோற்றமளிக்கின்றார்கள்.
இவ்வாறு கனகராயன்குளம் குறிசுட்டகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தலைமையேற்றுப் பேசிய HINDFOS AID அமைப்பின் தலைவர் நா. அருண்காந்த் தெரிவித்தார்.
இப் பாடசாலையில் கல்விகற்கும் சுமார் 66 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களையும் சீருடைகளையும் அமைப்பின் சார்பில் வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது.
இந்த கிராமத்தையும் மக்களையும் பார்க்கும் போது பொருளாதார ரீதியான புள்ளிவிபரங்கள் கோரத் தேவையில்லை. மக்களையும் மாணவர்களையும் பார்க்கும் போதே அவர்கள் எந்த அளவு வறுமையில் வாடி வருகின்றனர் என்பது தெரிகிறது. நமக்காக நாம் என்ற இந்த வேலைத்திட்டத்திற்கு நாம் எந்த வெளிநாடுகளிலும் நிதி உதவியினைப் பெறப்போவதில்லை.
காரணம் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நிபந்தனைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடும் இலங்கை மீது இராஜதந்திர நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளது. நாம் எமது வசதி படைத்த தனவந்தர்களையும் நலன்விரும்பிகளையும் சமுதாயப் பற்றாளர்களையும் கொண்டே எமது மக்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுத்து செயற்பட்டு வருகின்றோம். இந்த பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் பாடுபடுவோம்.
நீங்கள் எங்களோடு சரியான முறையில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பீர்களாயின் இம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். இப்பாடசாலையின் அதிபர் உரையாற்றும் போது இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் இல்லாதிருப்பதாக கூறினார். அவற்றை இம் மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி கூறுகின்றேன்” என்றார்.
இந் நிகழ்வில்HINDFOS AID அமைப்பின் தேசிய அமைப்பாளரும் கொடை வள்ளலுமான பொன். சந்திரபோஸ் அவர்களும், தேசிய ஆலோசகர் திரு. ராசையா செல்லையா அவர்களும், வன்னி மன்னார் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களும், வவுனியா நகர இணைப்பாளர் இமையவன் அவர்களும் கலந்துகொண்டனர்.

0 Comments:
Post a Comment