28 Nov 2016

அரசாங்கம் கூறுவது போன்று அவ்வாறுதான் நாங்கள் செயற்பட வேண்டும் என்ற நியதி எமக்கு இல்லை – நடராசா

SHARE
சில குறிப்பிட்ட பெயர்களைப் பயன்படுத்தாமல் இந்நிகழ்வுகளை நடத்தலாம் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. அரசாங்கம் கூறுவது போன்று அவ்வாறுதான் நாங்கள் செயற்பட வேண்டும் என்ற நியதி எமக்கு இல்லை. 
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (27) மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

எமது இனத்தின் விடுதலைக்காக உயிர்நீர்த அத்தனை பேரும் விடுதலை வேண்டிய போராளிகள்தான். இதனை யாரும் மறக்கவும் கூடாது மறைக்கவும் கூடாது. உயிர் நீத்த எமது உறவுகளின் நிகழ்வை அரசு இடம் தத்ததிற்காக நாம் நடாத்த வில்லை. கடந்த காலத்தில் இருந்த இக்கட்டான காலகட்டத்திலும் அவர்களை நினைவு கூர்ந்து வந்ததுதான் எமது வரலாறாகும்.

தமிழர்கள் வீரத்தின் பால் வீரம் செறிந்தவர்கள், தமிழர்கள் எதற்கும் பயந்தவர்கள் அல்ல எமது சரிததிரம் அதைச் சொல்லும். இந்நலையில்தான் எமக்காக உயிர்நீர்த்த உறவுகளை நாம் இன்று நினைவு கூருகின்றோம்.  இவ்வாறான இறப்புக்களினூடாக எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களின் துயரங்களிலும் நாம் கலந்து கொள்ளவேண்டியவர்களாயிருக்கின்றது.

இந்நிலையில் தற்போதுள்ள நல்லட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் நல்லதை எமது மக்களுக்குச் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எமது தலைவர்களிடத்தில் உள்ளது. இதனைக் குழப்புகின்ற சக்திகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவ்வாறு குழப்புகின்றவர்களுக்குப் பயந்து எமது மக்களின் அபிலாசைகளை விட்டு வைக்க முடியாது. எதிர் காலத்திலும் எந்த வடிவத்திலாவது எமக்காக உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது. உணர்வுகளினூடாக உயிர்களை இழந்தவர்களை யாரும் தட்டிக்கிக்க முடியாது. சர்வதேச ரீதியில் தலை நிமிர்ந்து தமிழன் என்று சொல்லும் அளவிற்கு வித்திட்டவர்கள் எமக்காக உயிர் நீத்தவர்கள்தான் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: