28 Nov 2016

இருவரினதும் சடலங்களும் மீட்பு

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை (25.11.2016) பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிய மாணவர்கள் இருவரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர - முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17) எனும் மாணவனின் சடலம் சனிக்கிழமையும் பங்குடாவெளியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) என்பரின் சடலம் சம்பவம் இடம்பெற்று 3 தினங்கள் கழிந்த நிலையில் திங்கட்கிழமை காலை (28.11.2016) மீனவர்களால் மீட்கப்பட்டன. 

பேரலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட சேகுதாவூத் அக்ரம் (வயது 17) என்ற மாணவன் கடல் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில் சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

மத்திய கிழக்கு நாடான கட்டாரில் தொழிலுக்காகச் சென்றிருந்த சிவதர்ஷனின் தந்தை சம்பவத்தைக் கேள்வியுற்று நாடு திரும்பி நேரடியாகவே தனது மகன் மூழ்கிய புன்னைக்குடா கடற்கரைக்கு வந்திறங்கிய வேளையில் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.






SHARE

Author: verified_user

0 Comments: