28 Nov 2016

தேடல் என்பது மாணவர்களிடத்தில் மாத்திரமின்றி ஆசிரியர்களிடத்திலும் தற்போது குறைவாகக் காணப்படுகின்றன – வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன்

SHARE

மாணவர்கள் அனைவரும் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும், நூலகம் மற்றும் ஈ நூலகம் போன்றவற்றில் அறிவு ரீதியான விடையங்களை தேடித் தேடி வாசிக்க வேண்டும். தேடலுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் தேடல் என்பது மாணவர்களிடத்தில் மாத்திரமல்லது ஆசிரியர்களிடத்திலும் தற்போது குறைவாகக் காணப்படுகின்றன. எனவே அனைவரும் தேடலை மையப்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
என மட்டக்களப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மட்.களுதாவளை மகாவித்தியாலய பழைய மாவணர்களின் ஏற்பாட்டில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்கிடையே நடாத்தப்பட்ட விவாதப் போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வு மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியலய தேசிய பாடசாலைக்கும், மட்.களுதாவளை மகாவித்தியாலய பாடசாலைக்கும் இடையில் திங்கட் கிழமை (28) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிடடார். இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….

பகுதிநேர வகுப்புக்கள் வந்ததன் பிற்பாடு தற்போது வீடுகளில் மாணவர்கள் படிப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் குறைவாகவுள்ளன. மாணவர்களுக்கு சுயமாக கற்கும், தேடலுக்கான வாய்ப்பு குறைவாகத்தான் கிடைக்கின்றன. இவற்றை மாற்றியமைக்க வேண்டும். தேடலின் முக்கியத்துவம் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்விடையங்கள் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், அவை காத்திரமாக முன்நெடுக்கப்படுவதாகக் காணவில்லை. என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது முதலாம் இடத்தை பட்டிருப்பு மத்திய மகாவித்தியலய தேசிய பாடசாலை மாணவர்கள் பெற்று 15000 ரூபாய் பணப்பரிசும், ஞாபகச்சின்னங்களும், வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தை மட்.களுதாவளை மகாவித்தியாலய மாணவர்கள் பெற்று 10000 ரூபாய் பணப்பரிசும், ஞாபகச் சின்னங்களும், வெற்றிக்கேடயமும்,  மட்.களுதாவளை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரால் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பழைய என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
















SHARE

Author: verified_user

0 Comments: