24 Nov 2016

கலை,கலாசாரகலைமன்றத்தினை ஸ்தாபிக்கும் கலந்துரையாடல் கூட்டம்

SHARE
(துறையூர் தாஸன்)
பிரதேசமட்டத்தில் பிரத்தியேககலை,கலாசாரநிகழ்ச்சிதொடர்பானகலைமன்றத்தினை ஸ்தாபிக்கும் கலந்துரையாடல் கூட்டம் இன்று(22.11.2016)
பிரதேசசெயலகமண்டபத்தில்,மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசெயலகசெயலாளர் மூ.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
அதிபராகநா.நாகேந்திரனும்செயலாளராக வீ.ஆர்.மகேந்திரனும் உப தலைவராகசெல்வப் பிரகாசும்,உப செயலாளராகத.தர்மிகாவும் பொருளாளராகபா.மோகனதாஸ் போன்றோர்,பிரதேசமட்டகலை,கலாசாரமன்றத்தின் பிரதானநிர்வாகிகளாகதெரிவுசெய்யப்பட்டனர்.

நடனக் கலைக்கூடம்,கர்நாடகசங்கீதகலைக்கூடம் ,கூத்துக் கலைக்கூடம்,கட்புலக் கலைக்கூடம்,தேலைத்தேய இசைக் கலைக்கூடம்,இலக்கியம் மற்றும் நூல் வெளியீட்டுக் கலைக்கூடம்,கிராமியநாடகக்கலைக்கூடம்,நவீனநாட்டியஆராய்ச்சிக் கலைக்கூடம்,பிரத்தியேககலைகலாசாரநிகழ்ச்சிதொடர்பானகலைக்கூடம்,தற்காப்புக் கலைக்கூடம்,போன்றவற்றுக்குமானபொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
பிரதேசசெயலாளர் மூ.கோபாலரெத்தினம்,கலாசாரஉத்தியோகத்தர் த.பிரபாகரன்,கலாசாரஅபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதிடிமாலினிபோன்றோரின் முன்னிலையிலேயேஅனைத்துதெரிவுகளும் மேற்க்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் ஆற்றுகைக் கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,குறுந்திரைப்படக் கலைஞர்கள்,புகைப்படக் கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்டபலதரப்பட்டோர் இதன் போதுகலந்துகொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: