கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போன ஊடகவியலளார்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
37 தமிழ் ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
37 தமிழ் ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடக சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடக அமைச்சு தொடர்பாக குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment