28 Nov 2016

அம்பாறை தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

SHARE
தெஹியத்தகண்டிய உள்ளூராட்சி மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியூடாக  நிர்மாணிக்கப்பட்ட குறித்த கடைத் தொகுதிகளின் உரிமையாளர்களுக்கான ஆவணங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  அஹமட்டினால்  வழங்கி வைக்கப்பட்டன.
இதன்  போது 40 கடைத்தொகுதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு  ஏறாவூர் நகர சபைக்கட்டடத்தில் இடம்பெற்றது


இதன் போது கடைத் தொகுதிகளின் உரிமையாளர்கள் இன மதம் மொழி பாராது   கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்னெடுக்கும் சேவைகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: