வடக்கு கிழக்கிலே 32 மாவீரர் துயிலும் இல்லங்க்ள காணப்படுகின்றன மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன. மாவீரர்கள் என்பது உச்சரிக்க முடியாத பெயர் அல்ல. இனத்திற்காகப் போராடி கலத்திலே உயிர் நீர்த்தவர்கள்தான் அவர்கள். மாவீரர் தினத்தை இனுஸ்ட்டிக்கப்போகின்றோம் என இங்கை அரசிடம் அனுமதி கேட்பதும் அதற்கு அவர்கள் அனுமதி வருவார்கள் என கேட்பதுவும் முட்டாள் தனமாகும். இலங்கை அரசு எக்காலத்திலும் அனுமதி தரமாட்டாது. ஆனால் அவர்க்ள அனுமதிகக்காவிட்டாலும் நாம் எந்த வித்திலும் மாவீரர் தினத்தை அனுஸ்ட்டித்து வருகின்றோம்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (27) மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
2002 ஆம் ஆண்டு வரை 17688 பேர் எம்மண்ணில் மாவீரர்களாக மடிந்துள்ளார்கள். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2009 மே 19 வரையில் கிட்டத்தட்ட 50000 மாவீரர்களை களப்பலியாகியுள்ளார்கள். இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களால்தான் எமது பிரச்சனை சர்வதேச அரங்கிலே பேசப்படுகின்றன. இது வரலாறாகும். இதனை மறக்க முடியாது.
மகிந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதிக்கவில்லைஈ ஆனாலும் நாங்கள் அதனைச் செய்தோம் ஆனால் இந்த அரசாங்கத்தில் கெடுபிடிகள் என்பது இல்லை. 2017 ஆம் ஆண்டு வாகரை அல்லது மாவடி முன்மாரி துயிலுமில்லங்களில் மாவீரர் நிகழ்வை பிரணமண்டமான முiயில் நடாத்தியே தீருவோம்.
இலங்கை நாடாளுமன்றத்திலே முதன்முதலாக மாவீரர்களுக்காக விளக்கேற்றிய தலைவர் என்றால் சம்மந்தன் ஐயாதான். இதனை யாரும் மறுக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் என்பது காலத்திற்கு ஏற்ப நகர்ந்து செல்கின்றது இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தந்தை செல்வா, அமிர்தலிங்கம், தலைவர் பிரபாகரன், போன்றவர்கள் கடந்த காலங்களில் பல ஏமாற்றங்களைக் கண்டவர்கள். ஆனால் எமது தற்போதைய தலைவர் சம்மந்தன் ஐயா ஏமாற்றப் படமாட்டார் என நான் சொல்லவில்லை. இவ்வாறான ஏமாற்றங்கள் வராமல் இராஜ தந்திரப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்கின்றது. மாவீரர்களின் கனவுகளுக்கு அப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லை.
தலைவர் பிரபாகரனூடாக ஓரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்மைக்கூட உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். ஆனால் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு நேர அரசியல் பணியைச் செய்யவில்லை அப்போது முழு நேர அரசியல் பணியைச் செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். 2009 மே 9 இற்குப் பிற்பட்பட காலப்பகுதியிலிருந்துதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு நேர அரசியல் பணியை முன்நெடுத்துள்ளது.
சர்வதேச தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரம் சம்மந்தன் ஐயாவைப் பார்க்க வில்லை. 2009 ஆம் அண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை 3 நாடாளுமன்றத் தேர்தல், 2 மாகாணசபைத் தேர்தல், 8 உள்ளுராட்சி சபைத் தேர்தல், பேன்றவற்றைச் சத்தித்துள்ளோம். இதன்போது எமது மக்கள் தந்த ஆணையினால்தான் தற்போதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. எனவே வடகிழக்கு தாயகத்தில் தலமை என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை எமது மக்கள் நிருபித்துள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment