6 Nov 2016

மண்முனைதென் எருவில் பற்றுபிரதேச சபையின் கலை கலாசார கலைஞர் கௌரவிப்புவிழா.

SHARE
(துறையூர் தாஸன்) 

உள்ளுராட்சி வார தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டு கலை கலாசார கலைஞர் கௌரவிப்பு விழா மண்முனைதென் எருவில் பற்றுபிரதேச சபை செயலாளர் சோ.குபேரன் தலைமையில், ஞாயிற்றுக் கிழமை (06) களுவாஞ்சிகுடி சி.மு.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல்(சட்டத்தரணி) ,சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.டொறின் பிரபாலினிசுரேஸ் றொபட் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜி.சுகுணன், களுவாஞ்சிக்குடி பொது சுகாதாரவைத்திய அதிகாரிடாக்டர் எஸ்.கிருஸ்ணகுமார் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழகசிரேஸ்ட உதவி நூலகர் எஸ்.எம்.மஸ்னூபா, நூலகர்கள், வாசகர் வட்டதலைவர், உறுப்பினர்கள், சன சமூக நிலைய தலைவர் உறுப்பினர்கள், கிராமஅபிவிருத்திச் சங்கத் தலைவர் , உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆலயதலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் , சமூக நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜி.சுகுணன் அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தினையும், சிறார்களுக்குகதை சொல்லும் மாஸ்ரர் சிவலிங்கம் கதைசொல்லல் பற்றியும் தனது வாசிப்பு அனுபவத்தையும் வாசிப்புப் பழக்கத்தை பெற்றோர்களே சிறார்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும் எனவும் எல்லாவற்றையும் வாசிக்காது, தேவையானதைதன் கற்றலுக்காக மாத்திரம் வாசிக்காமல் அறிவுவிருத்திக்காக எந்நாளும் வாசிக்கவேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும் இதில் பட்டிருப்பு தேசியபாடசாலை மாணவர்களின் விவாதப் போட்டியும் தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகத்தினரின் வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்திய நாடகமும் அரங்கேற்றப்பட்டன.

இலக்கியம், எழுத்து ஆகிய துறைகளுக்காக சேவையாற்றிய களுதாவளையைச் சேர்ந்த ஆ.அரசரெட்ணம், க.தருமரெத்தினம்(தேனூரான்) துறைநீலாவணை செல்லத்துரை களுவாஞ்சிக்குடி மு.பவளேந்திரன் அவர்களுக்கும், களுவாஞ்சிக்குடி இரா.அரசகேசரி தேற்றாத்தீவு பெ.ஆறுமுகமும் குருக்கள்மடம் மா.திருநாவுக்கரசு, குறுமண்வெளி மு.தம்பிப்பிள்ளை மகிழுர்முனை ஆ.கங்காசலம் போன்றோர் மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசபையினால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கவிதைத் துறைக்காக களுதாவளையைச் சேர்ந்த மி.அருள்மொழிராஜாவும், கூத்துத் துறைக்காக எருவில் வீ.இராசமாணிக்கமும், ஊடகத்துறைக்காக பெரியகல்லாறு ரவீந்திரனும், இலக்கியம் , கிராமியக் கலைக்காக தேற்றாத்தீவு இ.கோபாலப்பிள்ளை போன்றோரும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய வாசிப்புமாதத்தை யொட்டி மண்முனைதென் எருவில் பற்றுபிரதேச சபை நூலகங்களினால் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் கலைநிகழ்ச்சிகளில், விவாதத்தில் பங்கு கொண்ட பாடசாலை மாணவர்கள் போன்றோருக்கு பரிசுப்பொருட்களும் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.














SHARE

Author: verified_user

0 Comments: