14 Oct 2016

கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேணடும் என முதலமைச்சர் ஐநா பிரதிநிதியிடம் வலியுறுத்தல்.

SHARE
ஐக்கிய நாடுகளின்  சபையின் மனித உரிமைகள்பேரவையின்   சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக்  ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்  ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது

இன்று முற்பகல் முதலமைச்சர் அலுவலகத்தில்   இடம்பெற்ற இந்த சந்திப்பில்  சிறுபான்மையினரின் நலன் குறித்த பல விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன

கிழக்கில்  படையினர் வசமுள்ள  பொதுமக்களின் காணிகளை உடனடியாக  விடுவித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி வகுக்கவேண்டும் என முதலமைச்சர்  இதன் போது குறிப்பிட்டுள்ளார்

அத்துடன்போரினால்   பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவரான முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களின்  வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவதற்கான திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட  வேண்டும் என்பது  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் தெரிவித்தார்

அத்துடன் புதிய  அரசியல்  திருத்தின் ஊடாக சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

இதுவரை காலமும்  13   ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவதில் இருந்த இழுத்தடிப்பு  நிறுத்தப்பட்டு  உடனடியாக எவ்வித பேச்சுவார்த்தைகளுமின்றி மாகாணங்களுக்கு  உரித்தான அதிகாரங்கள் முழமையாக வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்

கிழக்கில்பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மையினரிடயே   தலைவரித்தாடும் வறுமை மற்றும்  வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றினாலயே   போதைப் பொருள்  பாவனை அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  ஊடகப் பிரிவு
SHARE

Author: verified_user

0 Comments: